Pages

Friday, December 17, 2010

2-ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ.யை தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டிய பொறுப்பை சுப்ரீம் கோர்ட் தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது..!

நீதியை பரிபாலனம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் உச்சநீதிமன்றம், இப்போது நீதி நிர்வாகத்தையே மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது நமது நாட்டைப் பிடித்த சோகம்தான்...!"2-ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, சி.பி.ஐ.யும் அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். எந்த உயர் பதவியில் இருக்கும் தனி நபர் மற்றும் ஏஜென்சிகளின் நிர்பந்தங்களுக்கும் கட்டுப்படாமல், விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கடந்த 2001 முதல் 2008-ம் ஆண்டுவரை நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட தொலைத் தொடர்பு கொள்கை பற்றி விசாரிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு எந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டது  என்பதற்கு, விசாரணையின்போது அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

இந்த விசாரணையின் நிலை அறிக்கையை, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும், 2011, பிப்ரவரி 10-ம் தேதி, சீலிட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்து விட்டதால், இந்த மோசடி பற்றி விசாரிக்க சிறப்புக் குழு எதையும் அமைக்க வேண்டிய தேவையில்லை.

ஏனெனில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் விரிவான விசாரணை மேற்கொள்வர் என, சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியமும், சி.பி.ஐ., சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் வேணுகோபாலும் உறுதி அளித்துள்ளதால், சிறப்புக் குழுவுக்கு அவசியம் இல்லை.

தகுதியில்லாத நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஆடிட்டர் ஜெனரல் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதில், உண்மையிருப்பதாக தெரிகிறது' எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

2-ஜி ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் அளித்த கடன் குறித்த விவரங்கள் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த ஊழலில் வங்கிகளுக்குப் பங்கு உள்ளதா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

- உரிம ஒப்பந்தத்தில், எந்தெந்த தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

- உரிமம் பெற தகுதியற்ற நிறுவனங்கள் மீது டிராய் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டறிய வேண்டும்.

- 2 ஜி உரிமம் வழங்கியதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று மனுதாரரான மூ்த்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களில் இந்த பெஞ்ச் திருப்தி அடைகிறது. குற்றம் நடந்ததற்கான பூர்வாங்கம் இருப்பதாகவும் உணர்கிறது.

- 2-ஜி ஏலம் தொடர்பான வழக்கு விசாரணையில் சிபிஐ பின் வாங்கியது, பதுங்கியது, தாமதம் செய்தது என்ற பூஷனின் குற்றச்சாட்டையும் இந்த கோர்ட் ஏற்கிறது.

- இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு விட வேண்டும் என்று கோரி மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்காமல் டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது, தவறாகும் என்று இந்த கோர்ட் கருதுகிறது.

- தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரின் அறிக்கை மற்றும் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஏலம் முற்றிலும முறைகேடாக நடந்திருப்பதையும் இந்த கோர்ட் உறுதிப்படுத்துகிறது.

- சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்தவுள்ள விசாரணையின்போது இந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு நடைமுறையால் நாட்டுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்பதையும் தெளிவாக கண்டுபிடிக்க வேண்டும்.

- நீரா ராடியா பேசிய பேச்சுக்கள் அடங்கிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் அனைத்தையும் வருமான வரித்துறை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.

இப்படி அடுக்கடுக்கான உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ஒரு வழக்கு விசாரணையை எந்தத் திசையில் நகர்த்துவது, நடத்துவது என்றுகூட செய்யத் தெரியாமல் தேங்கி நிற்கும் அரசுதான் இன்றைக்கு நம்மை ஆண்டு வருகிறது என்பதுதான்..!

உச்சநீதிமன்றத்தின் விளாசலைப் பொறுக்க மாட்டாமல்தான் லண்டனில் பதுங்கியிருந்த நீரா ராடியாவை அவசரமாக வரவழைத்து நேரில் விசாரித்தார்கள்.

நாடு முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். ராசா மற்றும் அவரது கொள்ளைக் கூட்டத்தினரை மிரட்டுவதாக நமக்கு பாவ்லா காட்டி சோதனை நடத்தினார்கள். இப்படி முதல்வர் வீட்டு ஆடிட்டர்வரையில் தங்களது கைவரிசையைக் காட்டி ஷோ காட்டியிருக்கிறது சி.பி.ஐ.

ஆனால் என்ன எடுத்தார்கள்..? எதைக் கண்டுபிடித்தார்கள் என்பதை அவர்கள் இனி சொன்னாலும் ஒன்றுதான்.. சொல்லாமல் விட்டாலும் ஒன்றுதான்..!

இத்தனை பெரிய நீதித்துறை கட்டமைப்பையே ஏமாற்றத் துணிந்த கொள்ளைக் கூட்டம், இவ்வளவு காலமா ஆதாரங்களை  விட்டு வைத்திருக்கப் போகிறார்கள்..?சரி.. சுப்ரீம் கோர்ட்டின் நேரடி டைரக்ஷனில் சிபிஐ இயங்கக் கூடிய நிலைமைக்குப் போய்விட்டதே என்று நமது பிரதமர் என்று சொல்லப்படும் மன்னமோகனசிங் கொஞ்சமாவது கவலைப்படுவார் என்று நினைத்தீர்களா..? நிச்சயமாக இருக்காது..

மானம், அவமானம் பற்றியெல்லாம் இனிமேலும் அவர் யோசித்துக் கொண்டிருந்தால் பிரதமர் பதவியில் அவர் நீடித்திருக்க முடியாது..  அதிகாரத்தைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, நீ எதற்கும் லாயக்கில்லை. வீட்ல சும்மா இரு என்று நீதிமன்றமே சொல்கின்றவரையில்தான் இவரது வேலை பார்க்கும் லட்சணம் இருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவருக்கு நரசிம்மராவே பரவாயி்ல்லை போலிருக்கிறது..!


இவ்வளவுக்குப் பிறகும் இவர் பிரதமர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது அரசியல்வியாதிகளுக்கு உரித்தான குணம்தான்..! இப்போதெல்லாம் கோர்ட், கேஸ், புகார்கள் இவையெல்லாம் தினம்தினம் அரசியல்வியாதிகள் சந்திக்கின்ற விஷயங்களாகப் போய்விட்டதால் இதெல்லாம் இவர்களுக்கு மரத்துப் போயிருக்கும்..

இவர்தான் இப்படியென்றால் நமது கல்லுளிமங்கன், தமிழினத் தலைவன், ஊழல் தாத்தா கலைஞர் கருணாநிதி மன்னமோகனசிங்கையும் மிஞ்சிவிட்டார்.

போயஸ் ஆத்தா விடும் அறிக்கைக்கு உடனுக்குடன் பதில் அளித்து நோஸ் கட் அளிக்கும் பணியைச் செவ்வனே செய்து வரும் இவரும், இவரது குடும்ப உறுப்பினர்களும் நீரா ராடியா டேப்புகள் பற்றி மட்டும் இன்றுவரையிலும் வாய் திறக்காதது ஏன்..?

ஜெயலலிதாவின் ஒவ்வொரு அறிக்கையையும் கண் கொத்திப் பாம்பாக பார்த்து வந்து முதல் நாள் அறிக்கையின் முதல் பத்தி, இரண்டாவது நாள் அறிக்கையின் இரண்டாம் பத்தியாக வந்திருக்கிறதே என்று கேட்கின்ற அளவுக்கு புத்திக் கூர்மையுள்ள இந்த மனிதர் தனது மகளும், மனைவியும் ஒரு அரசியல் புரோக்கருடன் தனது கட்சியை விலை பேசும் உண்மை வெளிவந்து இத்தனை நாட்களாகியும் கள்ள மெளனம் சாதித்து வருகிறாரே இது ஏனாம்..?

நேற்றைய ரெய்டுகளுக்குப் பிறகு இவரது துணைவியார் வாய் திறந்து ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். வோல்டாஸ் நிறுவனம் மற்றும் டாடா நிறுவனத்திற்குமான பிரச்சினையில் தனக்குச் சம்பந்தமில்லையென்று சொல்லியிருக்கிறார்.

வோல்டாஸ் நிறுவனம் அமைந்திருக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தின் பவர் ஆஃப் அட்டர்னி தன்னுடைய ராயல் பர்னிச்சர் கடையில் பர்னிச்சர்களைத் துடைக்கும் வேலை செய்து கொண்டிருந்த சரவணன் என்பவருக்குக் கிடைத்தது. அவருக்குத்தான் இதில் தொடர்பு என்று கூறியிருக்கிறார்.

இப்படி கடையில் தூசி தட்டியவருக்கு இத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்கும் அதிகாரத்தைக் கொடுப்பதற்கு டாடா நிறுவனத்தினர் என்ன முட்டாள்களா என்று நாம் திருப்பிக் கேட்கக் கூடாது.. ஏனெனில் இப்படி அறிக்கைவிட்டவர் தமிழினத்தின் தலைவரான கலைஞர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தியம்மாள். அவர் ஒன்று சொன்னால் ஒன்பது சொன்னதற்குச் சமம். கையது வாயது பொத்தி அமைதியாக இருங்கள் என்கிறார்கள்.

இவருடைய திருமகள் கனிமொழியும் நேற்றுதான் வாய் திறந்திருக்கிறார். இதுநாள்வரையிலும் தனது குடும்ப பிரச்சினைகளெல்லாம் வீதிதோறும், ஊர்தோறும், சேனல்கள்தோறும், பத்திரிகைகள்தோறும் நாறிய பின்பும் கண்டுகொள்ளாமல் பணம், அதிகாரம் இரண்டை மட்டுமே லட்சியமாகக் கொண்டு சிரிப்போடு வலம் வரும் இந்த அம்மணி தனக்கும், இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

ஆனால் நீரா ராடியாவுடனான பேச்சுக்கள் பற்றி கலைஞர், அவருடைய துணைவியார், மகள், மகன்களான மத்திய அமைச்சர்கள், டேப் பேச்சில் படிபட்ட அமைச்சர்கள், அடிப்பொடிகளான உடன்பிறப்புக்கள் என்று அனைவரும் பதில் சொல்லாமல் இருப்பதில் இருந்தே அவைகள் அனைத்தும் உண்மை என்பது தெளிவாகிறது..!

நேற்று அமைச்சர் பூங்கோதையிடம் இது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கும் அவர் பதில் சொல்லாமல் சென்றிருக்கிறார்.

நித்தியானந்தா ஜெயில் செல்லில் படுத்திருந்த விஷயத்தையே நான்கு தலைப்புகளில் வெளியிட்டு பிரத்யேகச் செய்தி என்று கொண்டாடிய நக்கீரன் தனது இணை ஆசிரியர் வீட்டில் நடந்த ரெய்டையும், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற கதையையும் சுத்தமாக மறைத்துவிட்டது. ஒரு சிறிய செய்திகூட அது பற்றி வெளியிடவில்லை.

இப்படியொரு இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளராக நக்கீரன் கோபால் இத்தனையாண்டு காலத்திற்குப் பிறகு உருவெடுத்திருப்பதற்கு அவருக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வோம்..!

ஆக மொத்தம், பொதுச் சொத்தைத் திருடிய கூட்டம் இன்றைக்கு தேள் கொட்டிய திருடனைப் போல் திருதிருவென முழிக்கிறது.

இந்தக் கள்ள நாடகத்தில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர்கள் இவர்கள்தான் என்பதால் இந்த நடிப்பு இவர்களுக்குக் கை வந்த கலை. திரை விழுகும்வரையில் நடிப்பைக் கொட்டிவிட்டுத்தான் போவார்கள்..!

அடுத்த முறை இவர்களை நாடக மேடையில் ஏற விடாமல் தடுக்கும் பணியை மட்டும் நாம் செய்தால், அது நமக்கும் நல்லது.. நமது வாரிசுகளுக்கும் நல்லது..!

Monday, December 6, 2010

எங்கும் எதிலும் ஒரே லஞ்சமயம்; சாலை சீரமைப்பு ஒப்பந்தம் பெறவும் லஞ்சம்; பணம் பெறவும் லஞ்சம்

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மாநிலம் முழுவதும் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் தரம் குறைவாக போடப்பட்ட சாலைகள், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சாலைகள் பாதிப்பால், பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் முக்கியப் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலைகளை, மாநில நெடுஞ்சாலைத்துறை அமைத்து, பராமரித்து வருகிறது. இது தவிர, மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு உட்பட்ட சாலைகளையும், நகராட்சி நிர்வாகம் தங்களுக்கு உட்பட்ட சாலைகளையும், ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலைகளை நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்களும் அமைத்து, பராமரித்து வருகின்றன.இந்தப் பணிகள் டெண்டர் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்கள் மட்டுமின்றி, இதர ஒப்பந்ததாரர்களும் இந்த டெண்டரை எடுத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.பொதுவாக தார் சாலைகளை அமைக்கும் போது, பதினேழரை செ.மீ., தடிமன் கொண்டதாக இருக்க வேண்டும்; தரமான ஜல்லி மற்றும் தாரினை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் ஒப்பந்ததாரர்களுக்கு விதிக்கப்படுகின்றன. மொத்த மதிப்பில், ஏழரை சதவீத தொகையை பிடித்தம் செய்து வைத்துக் கொண்டு, சாலைப் பணி முடித்த இரண்டு ஆண்டுகள் கழித்து, சாலையின் தரம் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்பே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்குகின்றனர்.இது போல பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டாலும், இவை நடைமுறையில் அமலில் இல்லை. சாலைப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், பல்வேறு மட்டங்களிலும் கப்பம் கட்ட வேண்டியுள்ளதால், சாலைகள் தரமானதாக அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:எந்த ஆட்சி அமைந்தாலும், உரிய கமிஷன் கொடுத்தால்தான், சாலைப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் எடுக்க முடியும்; வேலை செய்ய முடியும்; அதற்கான பணத்தை பெற முடியும் என்ற நிலை தொடர்ந்து வருகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு விகிதம் என கமிஷன் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் அமையும் சாலைப் பணிகளை மேற்கொண்டால், அமைச்சர் தரப்புக்கு ஏழு சதவீதமும், அந்த பணி நடக்கும் உள்ளூர் ஒன்றிய செயலருக்கு ஒரு சதவீதமும் கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது.இது தவிர உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட சாலைப் பணிகளை மேற்கொள்வதானால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சியாக இருந்தால் மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு கமிஷன் வழங்க வேண்டும்.இதன்பின், "டெண்டர் செட்டில்மென்ட்' என ஒரு சதவீதம் கொடுத்தால், சாலைப்பணி ஒதுக்கப்படும்.

பணி முடிந்தபின், அதற்கான பணத்தை பெறுவதற்கு என தனியாக, "கட்டிங்' கொடுக்க வேண்டும். இதற்கும் தனியாக பட்டியல் நடைமுறையில் உள்ளது.நெடுஞ்சாலைகளில் உதவிப் பொறியாளர்களுக்கு இரண்டு சதவீதம், உதவி கோட்ட பொறியாளர்கள், கோட்டப் பொறியாளருக்கு இரண்டு சதவீதமும் கமிஷன் வழங்க வேண்டும். ஐம்பது லட்சத்துக்கு மேல் மதிப்பீடு இருக்குமானால், தலைமைப் பொறியாளருக்கு ஒரு சதவீத கமிஷன் தனியாக வழங்க வேண்டியுள்ளது.இது தவிர, நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம், பேரூராட்சி இயக்குனர் அலுவலகம், உள்ளூர் உள்ளாட்சி அலுவலக அதிகாரிகள், நகராட்சி பொறியாளர்கள், மண்டல பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கப்பம் கட்ட வேண்டும்.

இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே, பணி முடிந்து அதற்கான தொகையை பெற முடியும்.சாலைப் பணிகளை முடித்து இரண்டு ஆண்டுகள் ஆன பிறகுதான், வைப்புத் தொகையாக பிடிக்கப்படும் ஏழரை சதவீத தொகையை திரும்பத் தருகின்றனர். மாநிலம் முழுவதும் நடக்கும் சாலைப் பணிகள், இந்த அடிப்படையில்தான் நடந்து வருகின்றன. இவர்களுக்கு கமிஷன் கொடுத்து கட்டுப்படியாகாத நிலையில், பல ஒப்பந்ததாரர்கள் தொழிலை கைவிட்டுவிட்டு, வேறு தொழிலை பார்க்கப் போய் விட்டனர்.பழைய சாலைகளை கொத்தி விட்டு, சாலை போட வேண்டும். ஆனால், நாங்கள் அதன் மேல் சாலைகளை அமைத்து, புதுச்சாலை போட்டதாக கணக்கு காட்டி விடுகிறோம். இவை ஒரு மழைக்கே தாங்காது என்பது உண்மைதான்.இத்தனை பேருக்கு கமிஷன் கொடுத்து பணியை செய்தால், அரசு நிர்ணயிக்கும் தர நிர்ணயங்களை நாங்கள் எப்படி கடைபிடிக்க முடியும்? சாலை அமைப்பு பணிகளில் நடக்கும் இந்த கமிஷன் விகிதங்களை கட்டுப்படுத்தினால் மட்டும்தான், தரமான சாலைகள் அமையும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக அரசு 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாநிலம் முழுவதும் சிறப்பு சாலைகள் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த சாலைகளாவது தரமானதாக அமைய, அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான், எந்த மழைக்கும் தாங்கக்கூடிய தரமான சாலைகள் அமையும்.

எங்கே போனது இன்ஜினியர்கள் திறமை?* அரசு ஆண்டு தோறும் சாலைகள் மேம்பாடு, சீரமைப்பு, புதிய சாலைகள் அமைத்தல், சிறுபாலங்கள் கட்டுமானம், பராமரிப்பு, ஆறுகள், ஏரிகள் தூர் வாருதல், மழைநீர் வடிகால் அமைப்பு, கால்வாய் சீரமைப்பு, சுரங்கப்பாதைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், என பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு பணிகளை மேற்கொள்கிறது. மழை காலத்திற்கு முன் தூர் வாருகிறோம், சுத்தம் செய்கிறோம், என்ற பெயரில் பணம் செலவழித்து சுத்தம் செய்கின்றனர். ஆனால், சுத்தம் செய்து வெளியேற்றப்படும் கழிவுகளை அங்கேயே போட்டு விட்டுச் செல்வதால், மழை நீர் செல்லும் போது அவை மீண்டும் வடிகால் பகுதிக்குள்ளேயே சென்று விடுகின்றன. இதனால், செலவழித்த பணம் விரயமாகிறது.

* சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, தகவல் தொழில் நுட்ப சாலை போன்ற சாலைகளை தனியாரே தங்கள் பணத்தைப் போட்டு உருவாக்குகின்றனர். அந்த சாலைகள் 15 ஆண்டுகள் வரை சேதம் ஏற்படாமல் தாக்குப் பிடிக்கின்றன. ஆனால், அரசு தரப்பில் போடப்படும் சாலைகள் மட்டும் ஒரு மழைக்கு கூட தாங்காமல் குண்டும், குழியுமாக ஆகிவிடுகின்றன. இங்கு சாலைகள் போடும் இதே கான்ட்ராக்டர்கள் சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளில் சாலை வசதிகளை கான்ட்ராக்ட் எடுத்து மிகவும் தரமாக, செய்து தருகின்றனர். ஆனால், நம்மூரில் சாலை போடுவது என்றால், "கட்டிங், கமிஷன்' கொடுத்த பின், "டுபாக்கூர்' சாலைகளை போட்டு விடுகின்றனர்.

*விண்ணில் ராக்கெட் செலுத்தும் அளவுக்கு தரமான பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால், தண்ணீர் தேங்காமல் ஒரு சுரங்கப்பாதையைக் கட்டுவதற்கு கூட அவர்களால் முடியவில்லை. அதற்கு, அரசியல்வாதிகளுக்கு கொடுக்க வேண்டிய லஞ்சம் தான் தடையாக உள்ளது.

*முதல்வர், அமைச்சர்கள், வி.ஐ.பி.,க்கள் குடியிருக்கும் பகுதிகளில் மட்டும் தரமான சாலைகள், மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய், மேம்பாலங்கள் என அனைத்து வசதிகளும் உடனுக்குடன் நிறைவேறி விடுகின்றன. ஆனால், அப்பாவி மக்கள் குண்டும், குழியுமான சாலைகளில் அலுவலகம் செல்வதற்கு படாதபாடு படும் நிலை உள்ளது.

-- தினமலர் 

ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து தங்கம் நீக்கமா? விலை சரிய வாய்ப்பா?

இந்தியாவில் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து, டிசம்பர் முதல் வாரத்தில் தங்கத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, வியாபாரிகள் மத்தியில் தகவல் பரவியது. இதனால், தங்கத்தின் விலையில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டது.


சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்கள், உடனுக்குடன் இந்திய மார்க்கெட்டில் எதிரொலிக்கிறது. 2003ல் கிராம் 523 ரூபாய்க்கு விற்ற தங்கம், 2007 - 1,000, 2008 - 1,250, 2009 - 1,550 என தொடர்ந்து, 2010ல் ஒவ்வொரு நாளும் ஓர் விலை ஏற்றத்தை சந்தித்து, நேற்று முன்தினம் அதிகபட்சமாக, கிராம் 1,915 ரூபாய்க்கு விற்றது. இந்நிலையில் நேற்று, தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டு, கிராமுக்கு எட்டு ரூபாயும், சவரனுக்கு 64 ரூபாயும் குறைந்து, கிராம் 1,907 ரூபாய்க்கும், சவரன் 15 ஆயிரத்து 256 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தை கொள்முதல் செய்வதில் நான்காம் இடத்தில் உள்ள இந்தியா, விலை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பங்கு வர்த்தகத்தை சரி செய்யும் விதமாகவும், தங்கம் விலையை கட்டுப்படுத்தும் வகையிலும், ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைரம் ஆகிய ஆபரணங்களை நீக்க, மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக பரவிய தகவலால், வியாபாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து நகை கடை உரிமையாளர் கூறியதாவது: ஆபரண பொருளாக கருதப்பட்டு வந்த தங்கம், தற்போது சர்வதேச அளவில் வர்த்தக ரீதியில் வியாபார பொருளாக கருதப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை, அவுன்ஸ் 800 முதல் 900 டாலர் என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், ஒரு ஆண்டாக 1,000 டாலருக்கு மேல் அதிகரித்து, தற்போது 1,442 டாலராக உயர்ந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால், தங்கம் அவுன்ஸ் 2,000 டாலராக உயர்ந்து விடும். சர்வதேச சந்தையில் அவுன்சின் விலையில் உயர்வு ஏற்பட்டால், இந்தியாவில் தங்கம் கிராம் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை வரும். இதை தவிர்க்கவும், ஆன்-லைன் வர்த்தகத்தில் நுழைந்துள்ள சீனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், இந்தியாவில் தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர, ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து, வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தங்கத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மும்பை வியாபாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கம் நீக்கப்பட்டால், தமிழகத்தில் தங்கம் விலையில் கடும் சரிவு ஏற்படும். கிராம் 1,200 ரூபாய்க்கும், சவரன் 9,600 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு உரிமையாளர் கூறினார்.நாம் நினைத்தால் ஏன் தங்கத்தை ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து நீக்க குரல் கொடுக்க கூடாது?பிரிட்டனில் கல்வி கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் திரண்டனரே அதைபோல் ஏன் நம்மால் முடியாது?

இந்த விலை ஏற்றத்தால் நீங்கள் பாதிக்கவில்லை என்றாலும் அப்பாவி ஏழை மக்களின் துயர் துடைக்க குரல் கொடுப்போம் ,கலைஞர் மட்டும் தான் கடிதம் எழுதுவாரோ ,நாம் ஏன் இந்த பிரச்சனைக்காக கலைஞருக்கு கடிதம் எழுதக்கூடாது ?எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது இது தேவையானு நினைக்காதீங்க ,இதுவும் ஒரு பிரச்சனைதான்!

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விலை உயர்வை பார்த்து, ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏழைகளுக்கு எட்டாத உயரத்திற்கு தங்கத்தின் விலை சென்றதற்கு, ஆன்-லைன் வர்த்தகம் தான் காரணம் என்று, தங்க நகை வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாழ்வில், தங்கம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அரசன் ஆனாலும், ஆண்டியானாலும் கடுகளவாவது தங்கம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. இன்றைய காலகட்டங்களில் தங்கம் வெறும், "முதலீடு' என்பதுடன் நிற்காமல், சமூக அந்தஸ்து, சேமிப்பு, எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும் என்ற எண்ணம், காலத்தால் அழியாத்தன்மை மற்றும் தங்கம் மீது பெண்களுக்கான மோகம் ஆகியவையால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
உலகில் தங்கத்தை அதிகமாக இருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. அதிகளவில் தங்கம் வெட்டியெடுக்கப்படும் நாடு தென் ஆப்ரிக்கா. ஆனால், அதிகளவு ஆபரணத்திற்காகத் தங்கத்தைப் பயன்படுத்தும் நாடு இந்தியா. தற்போது, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வரைமுறை இல்லாமல் அதிகரித்துச் செல்வது, பெண்களுக்கு தங்கத்தின் மீது கோபம் உள்ளதோ இல்லையோ, அதை வாங்கித் தராத கணவர்மார்கள் மீது தான் ஏகப்பட்ட கோபத்தில் உள்ளனர்.

தங்கம் தொடர் விலை உயர்வு குறித்து, சென்னையைச் சேர்ந்த தங்க நகை வியாபாரிகள் சிலர் கூறியதாவது: லண்டனில் தான் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை உள்ளது. இச்சந்தை, தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவிற்கேற்ப, சந்தை விலையை நிர்ணயிக்கின்றனர். அங்கு நிர்ணயிக்கக் கூடிய விலைக்கு தகுந்தபடிதான், உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
பொருளாதார மந்த நிலையில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலகச் சந்தையில் டாலர் மதிப்பு குறைந்ததால் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும், அந்நாட்டு அரசங்கமும் தங்க முதலீட்டை உயர்த்தியதால் தங்கத்தின் விலை உயர்ந்தது.

தங்கத்தை வெட்டி எடுப்பதற்கான கொள்முதல் விலை, 2004ம் ஆண்டு ஒரு அவுன்ஸ்(31.110 மி.கி.,) தங்கத்திற்கு 400 டாலர் செலவானது. ஆனால், இன்று தங்கத்தின் இருப்பு அளவு குறைந்துள்ளதால் சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கும் செலவும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இன்று தங்கம் விலை தினமும் உயர்வதற்கு, அப்போதைய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கொண்டுவந்த எம்.சி.எக்ஸ்., (மல்டி கமாடிட்டி எக்ஸ்சேன்ச்) எனப்படும் ஆன்-லைன் வர்த்தகமே காரணம் என, விவரம் அறிந்த வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். எம்.சி.எக்ஸ்., பட்டியலில், தங்கத்தை சேர்த்ததால், தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் 90 சதவீதத்திற்கும் மேலாக தங்கத்தை வாங்குவோர், நடுத்தர வர்க்கத்தினர் தான். இந்த ஆன்-லைன் வர்த்தகத்தால் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட, இவர்களால் தங்கம் வாங்க முடியாத நிலை உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு 22 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 860 ரூபாய். இது, 2007ல் 875 ரூபாய், 2008ல் 1,100 ரூபாய், 2009ல் 1,300 ரூபாய், இன்று 1,800 ரூபாய் முதல் 1,900 ரூபாய் வரை வந்து விட்டது.

வங்கிகள் தங்கப் பத்திரங்களை வெளியிடுகின்றன. இது வாடிக்கையாளர்களைக் கவர்வதால் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகிறது. தங்க முதலீடு பாதுகாப்பான முதலீடு என்ற எண்ணம் அதிகளவில் மக்களிடம் பரவியுள்ளதும், தங்க விலை உயரக் காரணம். இன்று பெரும்பாலான மக்கள் ஆபரணத் தங்கமாக வாங்காமல், வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் விற்கப்படும் சுத்தமான 24 காரட்டில் உள்ள தங்க பிஸ்கட் மற்றும் நாணயங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு தங்க நகை வியாபாரிகள்  கூறினர்

Thursday, November 25, 2010

சீதை தீக்குளித்தது ஏன்?

ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதையின் கற்புநெறியை நிரூபிக்க தீக்குளிக்கும்படி ராமன் சொன்னதை பெண் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. ராமனே இப்படி சந்தேகப்படலாமா? என்று கூறுவதுண்டு. ஆனால் சீதையால் அக்னிபகவான் தனது தூய்மையை மீண்டும் பெறவே இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. ராவணனின் யாகசாலையில் வேலைசெய்த அக்னிபகவான் பல பாவங்களை செய்ய வேண்டியதாக இருந்தது. பல முனிவர்களையும் சாதுக்களையும் ராவணனின் உத்தரவுப்படி அவன் அழித்தான். இந்த பாவத்தில் இருந்து நீங்கி பரிசுத்தம் ஆகவேண்டுமானால் சீதாதேவி என்னுள் மூழ்கி எழவேண்டும் என கோரிக்கை விடுத்தான். ராமனும் அதை ஏற்றுக்கொண்டு சீதாவை தீயில் மூழ்கிவரும்படி உத்தரவிட்டான். பகவானின் உத்தரவை ஏற்ற சீதா தீக்குள் இறங்கினாள். அவளது கற்புத்தீ முன் அக்னியின் பாவங்கள் எல்லாம் அழிந்துபோயின. இதுதான் சீதாதேவி அக்னிக்குள் இறங்கிய வரலாறு. நெருப்பையும் பரிசுத்தமாக்கும் வல்லமை பெற்றவள் சீதா.

சீதை கடத்தப்பட்ட ஊர்

ராமனும் சீதையும் வனவாசம் செய்தபோது ராவணன் சீதையை தூக்கி சென்றான். பஞ்சவடி என்ற இடத்தில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. பஞ்சவடி தற்போதைய நாசிக் என்ற ஊரின் ஒரு பகுதியாகும். மும்பையிலிருந்து 117 மைல் தூரத்தில் நாசிக் அமைந்துள்ளது. இங்கு கோதாவரி ஆறு பாய்கிறது. சூர்ப்பனகை இங்கு வந்துதான் சீதையை பார்த்து தனது அண்ணனிடம் தகவல் சொன்னாள். அப்போது லட்சுமணன் அவளது மூக்கை அறுத்தான். மூக்கு அறுபட்ட இந்த இடத்திற்கு நாசிகை என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே காலப்போக்கில் நாசிக் என்று ஆயிற்று.

--தினமலர்

அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா?

அர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா என்றால் சிலை என பொருள். இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தர் என்ற சொற்கள் வந்தன. அர்ச்சித்தர் என்றாலும் சிலை என்றே பொருள்படும். ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபசாரங்களுள் அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது.

ஆறுவகை உபசாரங்கள்

இறைவனுக்கு ஆறுவகையான உபசாரங்கள் செய்யப்படுகின்றன.

1. அபிஷேகம்: தண்ணீர், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல பொருட்களால் செய்யப்படுவது.
2. அலங்காரம்: பட்டு பீதாம்பரத்தாலும், பொன்னாலும், மலர் மாலைகளாலும், தங்க நகைகளாலும், வைர வைடூரியங்களாலும் அழகுபடுத்துவதாகும்.
3. அர்ச்சனை: பூக்களாலும், பாக்களாலும் செய்யப்படுவது.
4. நைவேத்தியம்: பல்வேறு உணவு வகைகள், பால், பழம் முதலியவற்றை படைப்பது.
5. ஆராதனை: தூபம் காட்டுதல், தீபம் காட்டுதல்.
6. உற்சவம்: பெரு விழா நடத்தி மூர்த்தியை வலமாக வீதிகளில் கொண்டு செல்லுதல்.

-- தினமலர் 

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.  முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். (இந்த வருடம் 6.11.2010 முதல் 11.11.2010 வரை.) சூரசம்ஹார தினத்தன்று (11.11.2010) அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.

பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம். அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !

ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம:  குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன.

சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம், அங்கு உஷத் காலத்தில் பெருமானின் கலைகள் எல்லாம் எல்லாத் தலங்களுக்கும் சென்று தெய்வப் பொலிவூட்டுகின்றன என்றும், அர்த்தஜாம காலத்தில் ஆயிரம் கலைகளும் பெருமானிடம் ஒடுங்குகின்றன என்றும், எனவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசிக்கும் புண்ணியத்தை, சிதம்பரத்தில் அர்த்தஜாமத்தில் வழிபடுவதால் பெற முடியும் என்று சிதம்பர மஹாத்மியம் குறிப்பிடப்படுகிறது. சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.

ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த குமாரஸ்தவம் என்னும் பாராயண நூலில், 25-வது மந்திரம் ஓம் சஷ்டி பதயே நமோ நம என்பதாகும், சஷ்டி தேவியின் நாயகனாக விளங்கும் சண்முகப் பெருமானுக்கு வணக்கம் என்பது இதன் பொருள். சஷ்டிதேவி, தேவசேனைப் பிராட்டியாரின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள். அதனால் தேவசேனைக்குரிய சஹஸ்ரநாமத்தில் - ஓம் ஷஷ்ட்யை நம, ஓம் ஷஷ்டீச்வர்யை நம், ஓம் ஷஷ்டி தேவ்யை நம. எனும் மந்திரங்கள் வருகின்றன. ஆறில் ஓர் அம்சமாகத் தோன்றியதால், இவள் சஷ்டிதேவி என்று அழைக்கப்பெறுகிறாள். பெற்ற தாய் கவனிக்காதிருக்கும் காலத்தும், பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர். சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான். திருமணமாகி பல ஆண்டு ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற - உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும், குழந்தை உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது.

பிரிய விரதன் மிகவும் நெகிழ்ந்து தேவி! தாங்கள் யார் என்று கேட்டான். நான் சஷ்டி தேவி, தேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பவள், பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு அவ்வரத்தை அருள்பவள். மாங்கல்ய பலம் இழக்கும் நிலையில் உள்ளவருக்கு அதனை நிலைப்படுத்துபவள். அவ்வாறே வினைப்பயன் எப்படியிருப்பினும், அவரவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும் செல்வப்பேற்றையும் அருள்பவள் என்று கூறி, அந்தக் குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டாள். குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவி, எப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும் திருப்தி கொள்வாள். இவள், அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள், யோகசித்தி மிக்கவள். பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு ஆறாம் நாளிலும், இருபத்தோராம் நாளிலும் சஷ்டிதேவியை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஐப்பசி மாதத்தில் வரும் மஹா ஸ்கந்த சஷ்டியைப் போன்று, ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியை குமார சஷ்டி என்று அழைப்பர்.  அதைப் போல கார்த்திகை மாதத்து வளர்பிறை சஷ்டியை சம்பக சஷ்டி என்றும், சுப்ரமண்ய சஷ்டி என்றும் கூறுவார்கள். இந்த சம்பக சஷ்டியை அனந்தசுப்ரமண்ய விரதம் என்றும் அழைப்பர். குழந்தைப்பேறு அளிக்கும் தெய்வங்களுள் முதன்மையானவர் முருகன் ஆவார். செகமாயை என்று தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில், முருகனையே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்வோர்க்கு, நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும் என்று வள்ளிமலை சச்சிதானந்தா சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். தென்காசிக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் என்று ஊரில் குமார சஷ்டி விழா ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனை தாரக ஹர குமார சஷ்டி என்று அழைக்கிறார்கள். இவ்விழாவில்  படிப் பாயாசம் வழங்குவது விசேஷமானது.

சரவணபவ தத்துவம்

சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின் மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோமுக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6  ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.

உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்த தினம் வைகாசி மாத - விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறுஉருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).

மு - முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு - ருத்ரன் என்கிற சிவன்
க - கமலத்தில் உதித்த பிரம்மன்.

ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன். காஞ்சி குமரப் பெருமானால் அடி எடுத்துக் கொடுக்கப்பட்டு கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் முருகன் அவதாரத்தை இவ்வாறு கூறுவார்:

அருவமும் உருவமாகி
அநாதியாய் பலவாய், ஒன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற ஜோதிப்
பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து ஆங்கு
உதித்தனன் உ<லகம் உய்ய!

இந்தப் பாடலை உள்ளன்புடன் ஓதினால் குழந்தைப் பேறு பெறலாம். - நாரதர் பழம் ஒன்றை சிவனிடம் வழங்க கணபதி சிவபார்வதியை வலம் வந்து பழத்தைப் பெற, கோபம் கொண்ட பாலன் தண்டம், கௌபீனம் அணிந்து பழனி ஆண்டியானான்.

தலம் பழனி (3-ஆம் படை வீடு) - கந்தனைப் புறக்கணித்து சிவனைத் தரிசிக்க பிரம்மா செல்ல, பிரணவத்திற்குப் பொருள் அறியாமல் அவர் சிறைப்பட, சிவனுக்கு பிரணவப் பொருள் உரைத்ததால் கந்தன், சிவகுருநாதன், சுவாமிநாதன் என்று போற்றப்பட்டான். இது நடந்த தினம் ஆடிப்பௌர்ணமி, குருபௌர்ணமி என்றும் கூறுவர். (தலம் - சுவாமிமலை 4-ஆம் படைவீடு). குருவருள் பெற உகந்த தினம். முருகன் தம் அவதாரக் காரணம் நிறைவேற குருவும் நாரதரும் புகன்றிட, திருச்செந்தூரில் தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகப் பதவியேற்றார். வீரபாஹுவைத் தூது அனுப்பினார். முடிவில் தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன், சூரபத்மாதியரையும் அழித்து வெற்றியை நிலைநாட்டினார்.

கந்தனின் ஆயுதம் - பராசக்தியின் மறு உருவமான வேல். சூரபத்மன் கடைசியில் மாமரமாக நின்றான். அதை வேலால் துளைக்க. ஒரு பாதி மயிலாகி வாகனம் ஆனான். மறு பாதி கொடியில் சேவலாக மாறினான். ராவண வதம், கம்ஸ வதம் என்பர், ஆனால் இங்கு மட்டும் சூரசம்ஹாரம் என்பர். வேறு எந்த தெய்வ அவதாரத்திலும் நிகழாத சம்பவம், அது தான் கந்தன் கருணை.  இது நடந்த தினம் கந்த சஷ்டி - தீபாவளி - அமாவாசைக்குப் பிறகு வரும் ஆறாவது நாள். இது நடந்த இடம் திருச்செந்தூர் ஜயந்திபுரம் (2 ஆம் படை வீடு) வெற்றி தினம் கந்த சஷ்டி தினம். மாத சுக்ல சஷ்டியும் கந்தனுக்கு ஒரு விசேஷ தினமாக அமைகிறது. சஷ்டியில் விரதம் இருந்தால் சகல நலன்களும் பெறலாம். தேவேந்திரன் கந்தனுக்குத் தனது பெண் தெய்வயானையை மணம் புரிவித்தான். சப்தமி தினம் இது நடந்த இடம் திருப்பரங்குன்றம் - (முதல் படைவீடு) - (திருப்பரங்குன்றத்தில் தெய்வயானை கல்யாணம் பங்குனி உத்திரம் அன்றே.) வேடன் நம்பிராஜன் மகளாக வள்ளி (மாதவன் மகாலஷ்மி நோக்கால் தைப்பூசத்தில் உதித்தவள்) வள்ளி மலையில் வளர்க்கப்பட்டாள். நாரதர் நினைவூட்ட, கந்தன், வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக வள்ளியை நாடி, சாடி, தேனும் தினையும் உண்டு, பணிந்து சுயதரிசனம் தந்து, போரும் புரிந்து, வள்ளியை மணந்து கொண்டான். இது நடந்த இடம் வள்ளிமலையில். திருத்தணிகையில் (5-ம் படைவீடு), வள்ளித் திருமணம், தைப்பூசம், மாசி பூசம், பங்குனி உத்திரத் தினங்களில் நடக்கின்றன. சிறுவனாக தோன்றி, ஒளவைக்குச் சுட்ட பழத்தைக் கொடுத்து, பாட வைத்துத் தரிசனம் தந்தான் பழமுதிர்ச் சோலையில் (6-ஆம் படைவீடு).

ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன ?

ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு.

நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார் :

1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,
2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,
3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,
4. உபதேசம் புரிய ஒரு முகம்,
5. தீயோரை அழிக்க ஒரு முகம்,
6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.

குமரகுருபரர் - தமது கந்தன் வரலாறான கந்தர் கலிவெண்பாவில் இவ்வாறு கூறுவார்:

(ஊமை பக்தருக்கு திருச்செந்தூர் முருகன் அடி எடுத்துக் கொடுக்கப் பாடியது.)

சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம்
முக்தி அளிக்க ஒரு முகம்
ஞானம் அருள ஒரு முகம்
அக்ஞானம் அழிக்க ஒரு முகம்
சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள ஒரு முகம்.

உயிரை மாய்த்துக் கொள்ள, கோபுரத்தினிற்று விழுந்தவரை ஏற்று, முத்தைத் தரு....... என்று பதம் எடுத்துக் கொடுத்த முருகன் அருளால் அருணகிரிநாதர் இவ்வாறு பாடுவார்:

ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

திருச்செந்தூர் புராணம் ஷண்முகனை இவ்வாறு கூறுவார்:

ஷடரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத்
ஷட் ஸூத்ரம் ஷண்மதம் ஷட்வேதாங்கம் ஷண்முகம் பஜே

ஷடரிம் - காமம், குரோதம், லோபம், மதம், மாத்சர்யம், மோகம் என்ற ஆறு அவகுணங்களை போக்குபவன் கந்தன். ஷட்விகாரம் - உண்டாக்குதல், இருத்தல், வளர்த்தல், மாற்றமடைதல், குறைதல், அழித்தல், என்ற ஆறு செயல்கள் அற்றவன்.
ஷட்கோசம் - அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு நிலைகளில் இருப்பவன். ஷட்ரசம் - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு, என்ற ஆறு வகை சுவைகளாக இருப்பவன். ஷட்ஸூத்ரம் - ஸாங்க்யம், வைசேஷிகம், யோகம், ந்யாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என்ற ஆறு சாத்திரங்களாக இருப்பவன். ஷண்மதம் - காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஆறு மத தத்துவமாக இருப்பவன். ஆக, ஷண்முகனை வணங்குதல் ஷண்மத ஈடுபாட்டுக்குச் சமம். என்னே ஷண்முகப் பெருமை ! ஷட்வேதாங்கம் - சிக்ஷõ, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், சந்தம் என்ற ஆறு வேத அங்கங்களாக இருப்பவன்.
ஷண்முகம் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம் என்ற சிவனின் ஐந்து முகங்களுடனும் அதோ முகத்துடன் கூடியும் உள்ளவன்.

ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன ?

ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு

ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம். ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம் நம: குமாராய என்பதும் ஷடாக்ஷரம் ஓம் நம: கார்த்தகேயாய என்பது குஹ அஷ்டாக்ஷரம் (8 எழுத்து) ஓம் நம; குருகுஹாய என்பதும் குஹ அஷ்டாக்ஷரம். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் முத்திரை அடி குருகுஹ. இதய குகையில் அமர்ந்து அஞ்ஞானம் அழித்து ஞானம் அளிக்கும் வள்ளல் குகன்.

ஓம் நம: ஸரவணபவாய என்பது குஹ தசாக்ஷரம் (10 எழுத்து).

ஓம் நம ஸரவணபவ நம ஓம் என்பது குஹ த்வாதசாக்ஷரம் (12 எழுத்து).

வடமொழியில் பீஜாக்ஷர மந்திரத்தில் அக்ஷரம் இரண்டு தடவை வரக் கூடாது என்பர். ஆகவே வடமொழியில் சரவணபவ என்பது ஷடாக்ஷரம். ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.

திருப்பரங்குன்றம் - மூலாதாரம்

திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்

பழனி - மணிபூரகம்

சுவாமிமலை - அனாஹதம்

திருத்தணிகை - விசுத்தி

பழமுதிர்சோலை - ஆக்ஞை.

ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம்

பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.


இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

18 படி தெய்வங்கள்

ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.

1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9.எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது

பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன?

முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.

இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.

மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.

ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.

ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவது படி.

எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.

ஒன்பதாம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது ஒன்பதாம் படி.

பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.

பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.

பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதின்மூன்றாம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.

பதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.

பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.


-- தினமலர்

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

உலக சினிமா வரலாற்றில் தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே படம் போல் இனி வேறு படம் ஓடுமா? என்பது சாந்தேக‌மே! இந்தப் படம் மும்பையில் தொ‌டர்ந்து 750வது வாரத்தை கடந்து ஓடிக் ‌கொண்டிருக்கிறது. பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ரா இயக்கிய இந்தப் படத்தில் ஷாருக்கான், கஜோல் இணைந்து நடித்துள்ளனர்.1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி வெளியான தில்வாலே... மும்பையில் உள்ள மாரதா மந்திர் என்ற திரையரங்கிலும் ரிலீசானது.அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக 15 வருடத்திற்கும் மேலாக ஓடிக் கொண்டிருக்கிறது. 750 வாரத்தையும் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை தற்போதும், வாரக் கடைசியில் ரசிகர்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசிக்கின்றனர் என்பது கூடுதல் ஆச்சரியம்! உலக சினிமா வரலாற்றில் இப்படியொரு படம் நீண்ட நாட்களாக ஓடி சாதனை படைக்கவில்லை.படத்திற்கு வரும் கூட்டத்தைப் பார்த்தால் இன்னும் பல வருடங்கள் தில்வாலே... ஓடும் என்று ஆச்சிரியப்பபடுகின்றனர் தியேட்டர் ஊழியர்கள்.

Wednesday, November 17, 2010

ஐய்யப்பன் வரலாறு -2

கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. தை மாதம் வரை, எங்கும் ஐயப்ப சரணகோஷம் ஒலிக்கும். இவரது வரலாறை புதிதாக மலைக்குச் செல்லும் கன்னி சுவாமிகள் தெரிந்து செல்ல வேண்டுமல்லவா!
தேவலோகத்தில் நாட்டியமாடும் ரம்பைக்கு, ஒரு மகள் இருந்தாள்; அவளது பெயர் மகிஷி. இவள் கடும் தவமிருந்து, இரண்டு ஆண்களுக்கு, அதுவும் சிவன் மற்றும் விஷ்ணுவுக்குப் பிறக்கும் மகனால் மட்டுமே அழிவு வர வேண்டுமென்ற வரம் பெற்றாள்.
"ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறப்பது சாத்தியமல்ல...' என்பதால், தன்னைக் கொல்ல யாருமில்லை என்று எண்ணிய மகிஷி, பல அட்டூழியங்களைச் செய்தாள்; தேவர்கள் அவஸ்தைப்பட்டனர். விஷ்ணுவிடம், இதுபற்றி முறையிட்டனர்.
அவர், மோகினி வடிவம் தாங்கி, சிவன் முன் வந்தார். சிவனின் ஒளிவெள்ளம் அந்தப் பெண் மீது பாய்ந்தது. அந்த ஒளிவெள்ளத்தில் தர்மசாஸ்தா அவதரித்தார்.  சாஸ்தாவுக்கு 14 வயது வரும் வரை, சிவலோகத்திலேயே வளர்த்தார் சிவபெருமான். சாஸ்தா, மகிஷியைக் கொன்று, அழுதை எனும் நதிக்கரையில் உடலை வீசினார். மகிழ்ந்த தேவர்கள், சாஸ்தாவுக்கு பொன்னம்பல மேடு எனும் இடத்தில், மலர்மாரி பொழிந்து, வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் ரிஷி ஒருவர் பங்கேற்றார். அவர் சாஸ்தாவிடம், "நீ எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்...' என வரம் கேட்டார். சாஸ்தாவும் அதை ஏற்று, கலியுகத்தில் அந்த ஆசை நிறைவேறும்!' என்றார்.
கலியுகம் பிறந்ததும், அந்த ரிஷி, தஞ்சாவூரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு விஜயன் என பெயர் சூட்டினர். முன்வினைப் பயனால், அவர் சாஸ்தாவின் பக்தராகத் திகழ்ந்தார். தனக்கு மகனாக சாஸ்தா பிறக்க வேண்டுமென பிரார்த்தித்தார். ஆனால், அப்பிறவியில் அந்த ஆசை நிறைவேறவில்லை. மறுபிறவியில் அவர் மலைநாட்டில், பந்தள மகாராஜாவாகப் பிறந்தார்.
இவரது ஆட்சிக்காலத்தில், உதயணன் என்பவன், கரிமலையில் தங்கி, மக்களின் பொருட்களைக் கொள்ளையடித்தான். அவனிடமிருந்து நாட்டைக் காக்க, சாஸ்தாவை மன்னர் வேண்டினார். பந்தளம் அரண்மனையில், ஜெயந்தன் என்ற பெயரில் பூசாரியாகப் பணிபுரிந்தார் சிவபெருமான். ராஜாவின் தங்கை மோகினியாக விஷ்ணு அவதரித்தார். ஒருமுறை மோகினியை உதயணன் கடத்தி விட்டான். அவளை மீட்க ஜெயந்தன் சென்றார்; அவரும் திரும்பவில்லை. தன் தங்கை இறந்திருப்பாள் எனக் கருதிய ராஜா, அவளுக்கு திவசம் செய்து விட்டார்.
ஆனால், ஜெயந்தன், மோகினியை மீட்டு வரும் வழியில், ஒரு துறவி அவர்களைச் சந்தித்தார். "மோகினிக்கு ராஜா திவசம் செய்து விட்டதால், அவளை அரண்மனையில் சேர்க்க மாட்டார்கள். நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு காட்டிலேயே இருங்கள்...' என்று சொல்லி விட்டார்.
அவர்களும் அவ்வாறே செய்தனர். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, பந்தள ராஜா காட்டுக்கு வேட்டைக்காக வர இருப்பதை அறிந்த ஜெயந்தன், குழந்தையைக் காட்டில் வளர்ப்பது கஷ்டம் என்பதால், கழுத்தில் ஒரு மணியைக் கட்டி, ராஜா வரும் வழியில் போட்டு விடச் சொன்னார்; மோகினியும் அவ்வாறே செய்தாள். குழந்தை அங்குமிங்கும் புரளும் போது மணி ஒலித்தது. இதைக் கேட்ட ராஜா, குழந்தையைக் கண்டெடுத்தார். கழுத்தில் மணியுடன் பார்த்ததால், "மணிகண்டன்' என பெயரிட்டு, அரண்மனைக்கு எடுத்துச் சென்றார். குழந்தையில்லாத ராஜாவும், அவரது மனைவியும் மணிகண்டனை அன்புடன் வளர்த்தனர். இதன்பிறகு ராஜாவுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மணிகண்டன் இளமையில் பல சாகசங்கள் புரிந்து, புகழ்பெற்றதை விரும்பாத அமைச்சர் ஒருவர், அரசியின் மனதைக் கலைத்து, "உங்கள் பிள்ளைக்கு முடிசூட மணிகண்டன் தடையாக இருப்பான். அவன் அழிய வேண்டுமானால், உங்களுக்கு வயிற்றுவலி வந்தது போல நடியுங்கள். புலிப்பால் கொண்டு வந்தால் தான் குணமாகும் என வைத்தியரைச் சொல்லச் சொல்லுங்கள்...' என்றார்.
ராணியும் அவ்வாறே செய்தாள். மணிகண்டன் சற்றும் கலங்காமல் காட்டுக்குச் சென்றார். காட்டுவாசிகளான கடுத்தசுவாமி, கருப்பசுவாமி ஆகியோர் அவருடன் சென்றனர். இந்நேரத்தில் கொள்ளையன் உதயணன், தான் செய்த கொலைகளை காட்டில் வசித்த வாபர் என்பவர் செய்ததாகப் பழி போட்டான். ஆனால், இந்த விஜயத்தைப் பயன்படுத்தி உதயணனை ஐயப்பன் கொன்றார். வாபர் அவரது நண்பரானார். புலிப்பாலுடன் ஊர் திரும்பினார். ராணி கலக்கமடைந்து மன்னிப்பு கேட்டாள்.
பின்னர் ராஜாவிடம் சபரிமலையிலுள்ள தர்மசாஸ்தாவின் கோவிலை புதுப்பிக்க வேண்டினார் மணிகண்டன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சென்றவர்கள், வனவிலங்குகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஆயுதங்களுடனும், முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டும், கறுப்பு அல்லது நீல ஆடை அணிந்து கொண்டும் மலையேறினர். கோவிலுக்குள் ஆயுதங்களைக் கொண்டு செல்லக்கூடாது என்பதால், ஓரிடத்தில் குவித்து விட்டனர். அந்த இடம் சரங்குத்தி என்று பெயர் பெற்றது. கோவிலை நெருங்கும் நேரத்தில் பெரும் சூறாவளி ஏற்பட்டது. அப்போது மணிகண்டன் சாஸ்தாவின் சிலையில் ஐக்கியமாகி விட்டார். அவர் சன்னிதி முன் கடுத்தசுவாமியும், கருப்பசுவாமியும் காவல் நிற்க அனுமதியளித்தார். தன் முடிசூட்டுக்காக செய்யப்பட்ட நகைகளை பந்தளராஜா ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று மலைக்கு கொண்டு வரும்படி அறிவித்தார்.
அவர் பந்தளத்தில் தங்கியிருந்த காலத்தில் குருகுலத்தில் பாடம் கற்றார். அப்போது குருவின் மகள் மணிகண்டனைக் காதலித்தாள். மணிகண்டன் அந்தக் காதலை ஏற்கவில்லை. தன்னைப் பார்க்க சபரிமலைக்கு எப்போது கன்னிசுவாமிகள் வரவில்லையோ அந்நாளில் அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார். ஆனால், அவளுக்கு தன் இருப்பிடத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து தங்கச் செய்தார். அவளை மாளிகைபுறத்தமன் என்றும், மஞ்சள்மாதா என்றும் அழைக்கின்றனர்.
மணிகண்டனை ஐயப்பன் என்றே பெரும்பாலானவர்கள் அழைக்கின்றனர். இதற்கு, "தலைவன் உயர்ந்தவன்' என்று பொருள். உயர்ந்த மலையிலுள்ள ஐயப்பனின் வரலாறைத் தெரிந்து கொண்டவர்கள், முறைப்படி விரதமிருந்து, கெட்ட பழக்கங்களையெல்லாம் நிரந்தரமாக கைவிட உறுதியெடுத்து, சபரிமலைக்குச் சென்று வாருங்கள்.      

-- சௌர்சே dinamalar

Tuesday, November 16, 2010

ஐயப்ப தரிசனம்-2

மாலை அணியும் முறை 

சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் ஒரு மண்டலம் (48 நாட்கள்) முன்னதாக அதாவது கார்த்திகை மாதம் முதல் தேதியே முத்திரை மாலையான ருத்ராட்சம். துளசிமணி இவைகளில் ஒன்றை குருநாதர் மூலம் கோயிலிலோ, வீட்டிலோ பூஜை செய்து அணிந்து கொள்ள வேண்டும்.

குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம் .

இருமுடி பொருட்கள்! 

இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் முன்முடியில் வைத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள்:

1. மஞ்சள் பொடி (குறைந்தது 100 கிராம்) (மலைநடை பகவதி, மஞ்சமாதாவுக்காக)

2. சந்தன பாக்கெட்

3. குங்கும பாக்கெட்

4. நெய் தேங்காய் - 1

5. சுதாதமான பசுவின் நெய்

6. விடலை தேங்காய் - 5 (எரிமேலி, சபரிபீடம், சரம்குத்தி, பதிöட்டாம்படி ஏறும்போதும், இறங்கும்போதும்)

7. பன்னீர் பாட்டில் (சிறியது)

8. கற்பூர பாக்கெட்

9. பச்சரிசி

  பின் முடியில் சமையல் செய்து சாப்பிடுவதற்கு தேவையான பொருட்களை குறைந்த அளவு எடுத்து செல்லலாம்.

கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

1. மாலை அணிந்து கொள்ளும் பக்தர் மிக முக்கியமாக பிரம்மச்சரிய விரதம் இருக்க வேண்டும்

2. காலை - மாலை இரு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை மனதார நினைத்து வழிபட வேண்டும்

3. இறைச்சி உண்ணக்கூடாது. மது அருந்தக்கூடாது. பீடி, சிகரெட் போன்ற பொருட்களை அறவே நீக்கிவிட வேண்டும்.

4. கறுப்பு, நீலம், பச்சை, காவி போன்ற கலர் வேட்டிகளையும், கலர்சட்டைகளையும் அணிய வேண்டும்.

5. குருவிடம் அணிந்த மாலையை எக்காரணத்தை கொண்டும் குளிக்கும்போது கூட கழற்ற கூடாது.

6. நமது நெருங்கிய ரத்த தொடர்பு உள்ள தாய், தந்தை, அக்காள், தங்கை, தம்பி, அண்ணன் போன்றவர்களின் மரணம் ஏற்படுமாயின் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிவிட்டுத்தான் துக்க காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

7. மாலையை கழற்றிவிட்டால் அந்த ஆண்டு மலைக்கு செல்வதை விட்டுவிட வேண்டும்

8. பெண்களின் சடங்கு நிகழ்ச்சிக்கோ, குழந்தை பிறந்த வீட்டுக்கோ செல்லக்கூடாது.

9. பெண்கள் மாதவிடாய் ஆரம்பித்து 7 நாட்கள் சென்ற பின்னர்தான் அவர்களிடம் உணவு சாப்பிட வேண்டும்.

10. மாலை அணிந்த எந்த பக்தன் வீட்டிலும் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் சாப்பிடக்கூடாது. பால், பழம் கொடுத்தால் சாப்பிடலாம்.

வழி தேவைக்கு...

வழிதேவைக்கு ஜோல்னா பையில் மறக்காலம் எடுத்து செல்ல வேண்டியவை.

பேட்டரி லைட் டூத் பேஸ்ட், பிரஷ், திருநீறு, சந்தனம், குங்குமம், மாற்றுவேஷ்டி, கற்பூரம், சாம்பிராணி, மெழுகுவர்த்தி, சட்டை, துண்டு, மழைக்காக பிளாஸ்டிக் பேப்பர் சின்னகத்தி, டம்ளர், தண்ணீர் பாட்டில், ஸ்வெட்டர், மப்ளர், தீப்பெட்டி, திருவிளக்கு, திரிநூல், நெய்.


இருமுடி தாங்கி செல்லும்போதும், வழியில் உபயோகிக்கவும் ஒரு கம்பளம் ஒரு விரிப்பு அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஐயப்பனுக்கு சாஸ்தா என ஏன் பெயர் வந்தது?

சாஸ்தா என்ற சொல் தற்போது தென்மாவட்ட மக்களால் சாத்தா என்று அழைக்கப்படுகிறது. சாத்து என்றால் கூட்டம் என பொருள். ஐயப்பன் கோயிலுக்கு வருபவர்கள் தனித்து வர முடியாது. கூட்டமாகத்தான் வரமுடியும். கூட்டமாக வந்து வணங்குவதால் இவர் சாஸ்தா என அழைக்கப்பட்டார்.

ஒரு காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 60 முதல் 70 பேர் வரை மட்டுமே சென்றார்கள். இப்போது செல்வதைப் போல லட்சக்கணக்கில் பக்தர்கள் அங்கு சென்றதில்லை. அப்படி செல்லும்போது கோடரி, ஈட்டி முதலிய ஆயுதங்களை எடுத்துச் செல்வார்கள்.

அப்படி சென்றாலும்கூட மிருகங்களிடம் சிக்கி பலரும் இறந்துவிடுவதுண்டு. 15 பேர்தான் திரும்பி வருவார்கள். அப்படி திரும்பி வருபவர்களை பக்தியுடன் ஏற்று குருசாமியாக கொள்ளும் வழக்கம் பழங்காலத்தில் ஏற்பட்டது.

இப்போதும் ஐயப்ப சுவாமிகளுக்கு தலைமை ஏற்று செல்பவரை குருசாமி என்றுதான் அழைக்கிறார்கள்.

நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார்.

அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.

எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணப் செல்வதென்றால் எளிதான காரியமா? இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.

ஐயப்பனின் முதல் தலம் 

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, பிரம்மாந்திரம் என்ற 7 வகை நிலையைப் பற்றி பலரும் அறிந்திருக்க நியாயமில்லை. ஒரு மனிதனை எடுத்துக் கொண்டால் அவனது மூலாதாரம்... கால்கள்.. சுவாதிஷ்டானம் இடுப்பு, மணிபூரகம் - வயிறு, அனாகதம்- பிறப்புறுப்பு, விசுத்தி - மனம், ஆக்ஞை - பிடரி, பிரம்மாந்திரம் - தலை ஆக 7 வகை நிலையில் மனிதனின் உடலமைப்பு உள்ளது. சிவனை எடுத்தக் கொண்டால் அவரது மூலாதாரம் - திருவாரூர். சுவாதிஷ்டானம் - திருவானைக்காவல், மணிபூரகம் - திருவண்ணாமலை, அனாகதம் - சிதம்பரம், விசுத்தி - காளத்தி, ஆக்ஞை - காசி, பிரம்மாந்திரம் - கைலாசம்.

அதுபோல தர்மசாஸ்தா எனப்படும் ஐயப்பனுக்கு மூலாதாரம் - பாபநாசம் சொரிமுத்தையன் கோயில். சுவாதிஷ்டானம் - அச்சன் கோயில், மணிபூரகம் - ஆரியங்காவு, அனாகதம் - குளத்துப்புழை, விசுத்தி - பந்தளம், ஆக்ஞை - சபரிமலை, பிரம்மாந்திரம் - காந்தமலை. இந்த வகையில் சபரிமலை சாஸ்தாவுக்கு முதல் முதலில் கோயில் தோன்றியதாக கூறப்படுவது பாபாநசத்திலுள்ள சொரிமுத்தையனார் கோயில் ஆகும்.

தர்ம சாஸ்தாவான ஐயப்பனே இங்கு சொரிமுத்தைய்யனார் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு செல்வது முன்னொரு காலத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. பொதிகை மலைக்காடுகளில், வனவிலங்குகள் ஏராளமாக வசிக்கும் காட்டுப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவே இந்தக் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசை அன்று இங்கு நடக்கும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.தாமிரபரணியில் நீராடி இந்த ஐயனை வழிபட்டால் எப்படிப்பட்ட பாவமும் விலகும் என்பது ஐதீகம். இதுகோயில் மட்டுமல்ல. மிகச்சிறந்த சுற்றுலாத்தலமும் ஆகும்.

நமஸ்கார ஸ்லோகம் ஸ்ரீ சாஸ்தா பஞ்ச ரத்தினம் 

ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி சுவாமியே சரணம்மய்யா என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்.

1.லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரஹாகரம் விபும்

பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)
2. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்

ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)
3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்

ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)
4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்

அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)
5. பாண்டிச்யேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம்

ஆர்த்தத் ராண பரம தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)
6. த்ரியம்பக புராதீசம் ககணாதீப சமன் விரதம்

கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம். (சுவாமியே சரணம் ஐயப்பா)
7. சிவ வீர்ய சமுத் பூதம் ஸ்ரீ நிவாச தானூர்த் பவம்

சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)

மாலை அணியும் மந்திரம்

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம்

வன முத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம்

சா;தமுத்ராம் சத்தியமுத்ராம் வருதுமுத்ராம் நமாம் யஹம்

சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே

குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரினே -

சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயா யஹம்

சின் முத்ரா கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம் யஹம்

சபர்யாசல முத்தராயை நமஸ்துப்யம் நமோ நவ;

மாலை கழற்றும் மந்திரம்

அபூர்வ சாலரோஹ - திவ்ய தரிசன காரிணே

சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ - வேஹமே விரத விமோசனம்.

ஐயப்பன் 18 படி தெய்வங்கள் 

1. விநாயகர்
2. சிவன்
3. பார்வதி
4. முருகன்
5. பிரம்மா
6. விஷ்ணு
7. ரங்கநாதன்
8. காளி
9. எமன்
10. சூரியன்
11. சந்திரன்
12. செவ்வாய்
13. புதன்
14. குரு
15. சுக்கிரன்
16. சனி
17. ராகு
18. கேது

Friday, November 12, 2010

தேவையா ஸ்பெக்ட்ரம் 2 ஜி?

ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஒதுக்கீட்டால் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என, மத்திய அரசின் தணிக்கை துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த தொகை இருந்தால், தமிழக அரசு மூன்று ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டிருக்க முடியும்; எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தியிருக்க முடியும். இவ்வளவு பெரிய தொகை இருந்தால், ஒரு மாநிலத்தையே தலைகீழாக மாற்றிவிட முடியும். இந்த ஒதுக்கீட்டால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமானம் கிடைக்கும் என்றும், முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்றும், ஐந்து தனியார் மட்டுமே இத்துறையில் இருந்ததை மாற்றி மேலும் சில தனியாரை கொண்டு வந்ததாகவும், அமைச்சர் ராஜா தரப்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், இவ்வளவு பெரிய தொகை இருந்திருந்தால், தமிழக அரசு மூன்று ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டு விட முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.


இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில், வரவுகள் 63 ஆயிரத்து 91 கோடியே 74 லட்சம் ரூபாய் எனவும், செலவுகள் 66 ஆயிரத்து 488 கோடியே 19 லட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 3,396 கோடியே 45 லட்சம் ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஆகிறது. இதுதவிர, கடன்கள், முன்பணம், மூலதனச் செலவுகளை கணக்கிட்டால், 16 ஆயிரத்து 222 கோடியே 13 லட்சம் ரூபாய் நிதிப் பற்றாக்குறை காட்டப்பட்டுள்ளது. எனவே, 1.76 லட்சம் கோடி ரூபாய் இருந்தால், 10 ஆண்டுகளுக்கு பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் போட முடியும். தமிழக அரசு எந்த வருவாயும் பெறாமல், மூன்று ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டு விட முடியும். உணவு மானியத்துக்காக மட்டும் தமிழக அரசு 4,000 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. 1.76 லட்சம் கோடி இருந்தால், பெட்ரோல் முதல் அனைத்து பொருட்களையுமே மிக மிக மலிவான விலையில் வழங்க முடியும். அதுமட்டுமன்றி, நதிநீர் இணைப்பு, புல்லட் ரயில், இருவழி ரயில் பாதை, தனி சரக்கு காரிடர், சாலை வசதிகள் என அனைத்து மிகப் பெரிய திட்டங்களையும் இத்தொகையில் செயல்படுத்தி, தமிழகத்தையே சிங்கப்பூராக மாற்றிவிட முடியும்.


தமிழகத்தில் நான்கு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் தொகையை பிரித்துக் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் தர முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஐந்து ஓட்டுகள் உள்ள குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் தர முடியும். பொருளாதார வல்லுனர்கள் இந்த தகவல்களை தெரிவித்துள்ளனர். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாக அமையும் என்பதில் வியப்பில்லை.


source : Dinamalar

Friday, October 29, 2010

உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்

ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 "ரியல் ஹீரோக்களில்' ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக "அக்ஷயா டிரஸ்ட்' என்ற அமைப்பையும் "ஸ்பான்சர்கள்' உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Source : dinamalar

Friday, October 15, 2010

ஐயப்ப தரிசனம்

பெருவழிப்பாதை பயணம் 

  
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்வார்கள். ஒரு காலத்தில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்ல எருமேலியிலிருந்து செல்லும் காட்டுப்பாதை மட்டுமே பயன்பட்டதாக கூறுவர்.

இந்தப்பாதையில் சென்று ஐயப்பனை தரிசிப்பதே முறையானதாகும். எருமேலியில் ஆரம்பித்து சபரிமலை வரையில் 56 கி.மீ., தூரம் உள்ள இந்த பாதை தான் பெருவழிப்பாதை என அழைக்கப்படுகிறது. இந்த பெருவழிப்பாதை வழியாகச் சென்றால் உடலும், உள்ளமும் தூய்மையடையும். பந்தளராஜா, ஐயப்பனைக் காணச் சென்ற வழியும் இதுவே.
இந்தப் பாதை வழியே ஐயப்பனைத் தரிசிக்க புறப்படுவோமா!
எருமேலி:

 சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எல்லோரும் ஒன்று கூடும் இடம் இது. இங்கு பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் உள்ளது. வேட்டைக்குச் செல்ல அம்பும், வில்லும் ஏந்தி நிற்கின்ற உருவில் தர்மசாஸ்தா காட்சியளிக்கிறார்.

வாபர் கோயில்:

எருமேலியில் பேட்டை சாஸ்தா கோயில் எதிரில் ஐயப்பனின் முஸ்லிம் நண்பரான வாபரின் பள்ளி வாசல் உள்ளது. ஐயப்ப பக்தர்கள் வாபர் பள்ளி வாசலுக்கு சென்று வணங்கி அங்கு தரப்படும் விபூதி பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.

பேட்டைதுள்ளல்:

ஐயப்பன், எருமைத்தலை அரக்கி மகிஷியை கொன்ற தலம் இது. எருமைக்கொல்லி எனப்பட்ட இத்தலம், "எருமேலி' என மருவியது. இது மணிகண்டன் மகிஷியை வதம் செய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாக பக்தர்களால் நடத்தப்படும் ஓர் சடங்கு தான் பேட்டை துள்ளல் எனப்படுகிறது. . உடல் மீது வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டு, இலை, தழைகளை கட்டிக் கொண்டு மரத்தினாலான ஆயுதங்களுடன் மேளதாளத்துடன் சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என ஆடிப்பாடிக் கொண்டு வாபர் சன்னதியை வலம்வந்து பின் பேட்டை சாஸ்தா கோயிலிலிருந்து தர்மசாஸ்தாவின் சன்னதி வந்தடைந்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு பெருவழிப்பாதையாத்திரையை தொடர வேண்டும்.

பேரூர்தோடு:

பெருவழிப்பாதையில் முதலில் வரும் இடம் பேரூர்த்தோடு. இது ஓர் சிறிய ஆறு ஆகும். எருமேலியிலிருந்து சுமார் 2 மைல் கிழக்கே இருக்கிறது. பக்தர்கள் இந்த ஆற்றில் நீராடி, சிறிது இளைப்பாறி சுவாமியை வழிபட்டுத் தங்கள் பயணத்தை தொடரலாம்.

காளையை கட்டிய மரம் :

காடு, மலை ஏறி, இறங்கி மேலும் சுமார் 6 மைல் நடந்து, அழகிய வனத்தில் காளைகட்டி என்ற இடத்தை சென்றடையலாம். மகிஷியை கொன்ற தன் மகன் மணிகண்டனை வாழ்த்துவதற்காக வந்த சிவன், தனது வாகனமான காளையைக் கட்டிய இடம் என்று கருதப்படுவதால், இப்பெயர் ஏற்பட்டது.
காளைகட்டியிலிருந்து கிழக்கே சுமார் ஒன்றரை மைல் நடந்து அழுதாநதிக் கரையை சென்றடையலாம். மணிகண்டனால் தூக்கி எறியப்பட்ட மகிஷியின் உடல் இந்த நதிக்கரையில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இயற்கை அழகும், நெடிய மரங்களும் அவைகளை அணைத்து நிற்கும் பசுங்கொடிகளும், பள்ளத்தாக்கில் ஓடிவரும் அழுதாநதியும் பார்க்க பரவசமடையச் செய்யும். 

அழுதாநதி:

அழுதையாற்று நீரில் நீராடி, ஒவ்வொருவரும் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். அங்கிருந்து சுமார் 2 மைல் நடந்து அழுதைமேடு என்ற குன்றில் ஏறினால் இஞ்சிப்பாறைக்கோட்டை என்னுமிடத்தை அடையலாம். பின்னர், கல்லிடும் குன்று என்ற இடம் வருகிறது.

மகிஷியை வதம் செய்த ஐயப்பன், அவளது உடலை இங்கு புதைத்துவிட்டு, கனமான கற்களை வை த்துச் சென்றாராம். இதன் அடிப்படையில் அழுதா நதியில் எடுத்து வந்த கற்களை பக்தர்கள் இவ்விடத்தில் போட்டுச் செல்கிறார்கள்.      

காவலர் ஐயப்பன் :

அழுதாமலை உச்சியில், "இஞ்சிப்பாறைக்கோட்டை' இருக்கிறது. இங்குள்ள கோயிலில் "தேவன் வியாக்ரபாதன்' என்ற பெயரில் ஐயப்பசுவாமி அருளுகிறார். "வியாக்ரம்' என்றால் "புலி'. ஐயப்பன் புலிகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன்னைக் காணச்செல்லும் பக்தர்களைப் பாதுகாக்கும் காவலராக விளங்குகிறார். ஆன்மிக ரீதியாக, இதை வேறு மாதிரியாக பொருள் காணலாம். மனிதன், இந்த உலக இன்பத்தை பெரிதென நினைக்கிறான். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய இன்பங்களை அடைய ஆசை கொண்டு, பாதகங்களைச் செய்யக் கூட தயாராகி விடுகிறான். இந்த பாதகங்களே மனதை ஆட்டிப்படைக்கும் புலிகளுக்கு ஒப்பிடப்படுகிறது. இந்த கொடிய புலிகளை கட்டிப்போட்டு விட்டால் மனதில் நல்ல சிந்தனைகள் மட்டுமே தங்கும். பக்தி மார்க்கத்திற்குள் மனிதன் வருவான். இந்த ஐயப்பனை வணங்கி விட்டு நடந்தால், முக்குழி என்ற இடம் வரும். இங்கு மாரியம்மன் அருள் செய்கிறாள். அம்பிகையை வணங்கி விட்டு தொடர்ந்து நடந்தால் கரியிலம்தோட்டை அடையலாம். இவ்விடத்தில் மலைப்பாதை சமதளமாக இருக்கும். இங்கு பக்தர்கள் தங்கிச் செல்ல வசதியுள்ளது. அங்கு உணவருந்தி சிறிது ஓய்வெடுத்துப் பின் புதுச்சேரி என்ற ஆற்றை கடக்க வேண்டும். 

கரிமலை: 

கரியிலம்தோட்டை அடுத்து கரிமலை அடிவாரத்தை அடையலாம். இந்த மலையில் ஏறும்போது தங்கள் பிரம்மச்சரிய விரதத்தின் சக்தியை உணரலாம். இதை விட கடினமான மலை உலகில் இல்லையோ என்று எண்ணுமளவுக்கு பெரும் ஏற்றத்தில் பக்தர்கள் ஏறுகிறார்கள்.

இம்மலையிலுள்ள மண் கருப்பாக இருக்கும். எனவே இம்மலைக்கு "கருமலை' என்ற பெயர் இருந்து "கரிமலை' என்று மாறிவிட்டது. மலை உச்சியில் கரிமலைநாதர் என்ற மூர்த்தியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.இங்கு சுவையான தண்ணீருடன் கூடிய சுனை உள்ளது. இதை ஐயப்பன் தனது அம்பினால் உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நீரை பக்தர்கள் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். 

கரிமலையில் மிகவும் கவனமாக நடக்க வேண்டும். ஏனெனில், ஒரு ஒற்றையடிப் பாதையே நம் கண்முன் தென்படும். ஒரு பக்கம் அதலபாதாளம், மறுபக்கம் உரசும் பாறைகள் என இருப்பதால் மிக கவனமாக ஏற வேண்டும். ஏற்றம் இருக்கும் அளவுக்கு இறக்கமும் பக்தர்களைச் சிரமப்படுத்தும். கால்கள் பின்னி தடுமாறும். ஆனாலும், ஐயப்பன் கருணையுடன் இந்த இடத்தைக் கடக்க அருள்செய்வார். மனதிற்குள் சரணம் சொல்லியபடியே பக்தர்கள் மலையேறுவார்கள். இம்மலையில் மூலிகைச் செடிகள் அதிகம் இருக்கிறது என்பதால், இதைக் கடந்தவுடனேயே தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்கிறார்கள்.

பெரியானை வட்டம் :

கரிமலையைக் கடந்து சமதளப்பகுதி வருகிறது. இவ்விடத்தை "பெரியானை வட்டம்' என்பர். யானைகள் அதிகமாக வசித்த பகுதி என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. இங்கே பம்பா நதி சிறு ஓடைபோல பாய்கிறது. இங்கிருந்தபடியே மகர ஜோதியை தரிசிக்கலாம் என்பதும் விசேஷத்தகவல். இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் "சிறியானை வட்டம்' என்ற பகுதி வருகிறது. இங்கு பம்பை நதி பரந்து ஓடுவதைக் காணலாம். இங்கிருந்து சிறிது தூரம் பயணம் செய்து பம்பா நதியை அடையலாம்.
   

பம்பா நதி:


எருமேலியிலிருந்து பெரும் பாதை வழியாக நடந்துவரும் பக்தர்களும் சாலக்காயம் வழியாக வரும் பக்தர்களும் பம்பா நதிக்கரையில் ஒன்று கூடுகின்றனர். கங்கையைப்போன்ற புண்ணிய நதி பம்பா. இந்த நதிக்கரையில் தான் ராமர் தனது தந்தை தசரதருக்கு "பிதுர் தர்ப்பணம்' செய்ததாக கூறுவர். 

இதனடிப்படையில் ஒரு சில பக்தர்கள் இந்த நதியின் முதல் பாலம் அருகே உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடி, பிதுர் தர்ப்பணம் செய்கின்றனர். மற்ற பக்தர்கள் எல்லாம் இங்கு நீராடி நீண்டதூரம் நடந்து வந்த களைப்பைப் போக்கிக் கொள்கின்றனர். 

ஐயப்ப "சத்ய' :

பம்பையாற்றின் கரையில் ஓர் இரவு தங்கி, இரவில் ஆற்றில் பம்பாவிளக்கு ஏற்றி சுவாமியை வழிபடுகின்றனர். பின்னர், இருமுடியின் பின் முடியிலுள்ள சமையல் சாமான்களைக் கொண்டு சமைக்கின்றனர். அந்த உணவை ஐயப்பனுக்கு நைவேத்யம் செய்து, அதை பக்தர்களுக்கு விருந்தாக (சத்ய) கொடுத்து உபசரிக்கின்றனர். பக்தனை உபசரிப்பது பகவானையே (ஐயப்பன்) உபசரிப்பது போல என கருதுகின்றனர். ஐயப்பனே பக்தர்களின் வடிவில் சாப்பிடுவதாக ஐதீகம். இந்த பூஜையை "பம்பா சக்தி' என்றும், "சக்தி பூஜை' என்றும் சொல்வர்.

பம்பா கணபதி :

பின்னர் பம்பையாற்றின் கரையிலுள்ள கணபதி, ராமர், அனுமன், சக்தி கோயில்களில் வழிபட்டு, பந்தள மன்னர் பரம்பரையில் வந்தவர்களுக்கு காணிக்கை செலுத்தி, அவர்களிடம் விபூதி வாங்கி நெற்றியில் அணிந்து நீலிமலை ஏற துவங்கலாம். பெண்கள் இப்பகுதியைத் தாண்டி மலையில் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
நீலிமலை:

இந்த மலையில் ஏறுவதும் கரிமலையில் ஏறுவது போல் மிகக்கடினம். கால் முட்டி, தரையில் உரசுமளவுக்கு மிகவும் சிரமப்பட்டு இந்த மலையை ஏற வேண்டும். நீலிமலையில் வசித்த மாதங்க மகரிஷி, தன் மகள் நீலியுடன் சிவனை நோக்கி தவம் செய்த தாகவும், அவளது பெயரில் இம்மலை விளங்குவதாகவும் கூறப்படுகிறது.
இம்மலைப்பாதையின் துவக்கப் பகுதியில், வலது பக்கமாக ஒரு பாதை பிரிகிறது. இதை "சுப்பிரமணியர் பாதை' என்பர். இந்த வழியாகத்தான் ஐயப்பன் கோயிலுக்கு தேவையான சாமான்கள் கழுதை மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.

நீலிமலை ஏற்றத்தில் அப்பாச்சி மேடு, இப்பாச்சி குழி என்ற சமதளப்பகுதி வருகிறது. அப்பாச்சிமேட்டில் பச்சரிசி மாவு உருண்டையை கன்னிசுவாமிகள் வீசி எறிவார்கள். வனதேவதையை திருப்திப்படுத்த இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.

சபரிபீடம்:

  

 நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில் தான் "சபரிமலை' என்று பெயர் தோன்றக் காரணமான சபரி அன்னை வசித்தாள். இந்த மூதாட்டிக்கு ராமபிரானின் மீது மிகுந்த பக்தி உண்டு. பக்தன் பகவானைத் தேடி சென்றது விஷ்ணுவின் மற்ற அவதாரங்களில்.ஆனால், பகவான் பக்தனைத் தேடி, தனக்குத்தானே 14 ஆண்டு காட்டுவாசம் என்ற தண்டனையை விதித்துக் கொண்டு வந்த அவதாரமே ஸ்ரீராம அவதாரம்.

அவ்வகையில், ராமபிரான் வசிஷ்டரைக் குருவாகக் கொண்டு, விஸ்வாமித்திரருக்கு தொண்டு செய்து, இன்னும் காட்டிலுள்ள பல மகரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அந்த ரிஷிகளுக்கும் மேலான பக்தியைக் கொண்டவள் சபரி அன்னை. இவள், இந்த மலையில் தங்கி ராமனின் தரிசனத்திற்காக காத்திருந்தாள். அவள் என்ன செய்தாள் தெரியுமா?

ராமனுக்காக காட்டில் கிடைக்கும் இலந்தைப்பழங்களைப் பொறுக்கினாள். அதை கடித்துப் பார்த்து, இனிப்பானவற்றை சேர்த்து வைத்தாள். இலந்தையை காய்ந்தாலும் தின்னலாம். ராமன் வந்ததும் அந்தப் பழங்களை காணிக்கையாக்கினாள்.எச்சில் பழமெனக் கருதாத பகவானும் சபரியின் அன்பை அந்தப் பழங்களைச் சாப்பிட்டதன் மூலம் ஏற்றார். அவளுக்கு மோட்சம் தந்தார். அந்த பரமபக்தையின் பெயரே சபரிமலைக்கு நிலைத்து விட்டது. இங்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும். இங்கிருந்து சன்னிதானம் வரை சமதளமான பாதையில் ஆசுவாசமாக நடந்து செல்லலாம்.

யானைப்பாதை :

சபரிபீடத்தை அடுத்து சன்னிதானத்திற்கு செல்லும் பாதை இரண்டாகப்பிரிகிறது. இடது பக்கம் செல்லும் பாதை யானைப்பாதை எனப்படுகிறது. ஆனால், பக்தர்கள் வலது பக்கம் உள்ள சரங்குத்தி பாதை வழியாகத்தான் செல்கின்றனர்.

சரங்குத்தி:

இது கன்னி ஐயப்பன்மார்களுக்கு ஒரு புனிதமான இடமாகும். இங்கு கன்னிச்சாமிகள், எருமேலியில் பேட்டை துள்ளிவிட்டு கொண்டுவரும் மரக்கத்திகளை போட்டு வழிபடுகின்றனர். இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் சுவாமி ஐயப்பனின் புனித சந்நிதானம் அடையலாம்.

சன்னிதானம்:

சரங்குத்தி தாண்டியவுடன் தெரியும் ஐயப்பனின் தங்க கோயிலை தரிசித்தவுடனேயே, மனம் உற்சாகமாகிறது. ஐயப்பன் சன்னிதானம் நெருங்க நெருங்க "சாமியே சரணம் ஐயப்பா' என்று பக்தர்கள் முழங்கும் சரண கோஷம் விண்ணைப்பிளக்கிறது.

பொன்னு பதினெட்டாம் படி:

சன்னிதானத்தை அடைந்ததும் நாம் முதலில் தரிசிப்பது 18 படிகள். இந்த படிகள் அனைத்தும் தங்கத்தகடுகளால் ஆனது.
18 படிகள் ஏறும் முன்பு இருபுறமும் உள்ள கடுத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து, தேங்காய் உடைத்து, சரண கோஷத்துடன் பதினெட்டுப்படிகளில் ஏற வேண்டும்.

நாம் செய்த பாவங்கள் விலகி, ஆணவம் அடங்கி ஐயப்பனின் தரிசனம் வேண்டும் என்ற அடிப்படையில் தான் படி ஏறும் முன் தேங்காய் உடைக்கப்படுகிறது. இங்குள்ள 18 படிகளும் 18 தெய்வங்களாக விளங்குவதால், தலையில் இருமுடி வைத்திருப்பவர்கள் மட்டுமே 18 படி ஏறமுடியும்.

"தத்வமஸி':

பதினெட்டு படி ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். சன்னிதான வாசலில் "தத்வமஸி' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது "நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய்' என்பது இதன் பொருள். ""ஏ மனிதனே! தெய்வத்தை தேடி நீ இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்க வேண்டியதில்லை.

காடு மேடுகளைக் கடந்திருக்க வேண்டியதில்லை. உனக்குள்ளேயே நான் இருக்கிறேன். நான், இங்கிருந்து உன்னை எப்படி பாதுகாக்கிறேனோ, அதுபோல் நீயும் உன்னைச் சார்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள். அவர்களிடம் நல்லதைப் பேசு, நல்லதை செய், நன்மையே நாடு'' என்பது இந்தச்சொல்லுக்குள் அடங்கியுள்ள தத்துவம்.  

ஐயப்பன் மூலஸ்தானம் :

படியேறிய பக்தர்கள் கொடிமரம் தாண்டி கோயிலை வலம் வந்து ஹரிஹர புத்திரனாகிய தர்மசாஸ்தாவை கண்டு மனமாற வேண்டிக்கொள்ளலாம். ஐயப்பனை தரிசித்தாலே இந்தப்பிறவியின் பலனை அடைந்த சந்தோஷம் ஏற்படும்.
மூலஸ்தானத்தில் ஐயப்பன் ஆனந்த சொரூபனாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, கேட்டவரம் தரும் வள்ளலாக ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இவர் மூன்று விரலை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு "சின்முத்திரை' காட்டுகிறார். "சித்' என்றால் "அறிவு'. இந்த வார்த்தையே "சின்' என திரிந்துள்ளது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவது சின்முத்திரை.

""மனிதா! நீ என்னை நாடி இத்தனை மேடுகளை கடந்து வந்தாயே! இதனால், நான் மகிழ மாட்டேன். என் மடங்கிய மூன்று விரல்கள் உன்னிடமுள்ள ஆணவம், கன்மம் (பொறாமை), மாயை(உலக வாழ்வும் இன்பமும் நிலைத்திருப்பது என்ற எண்ணம்) ஆகியவை. என் ஆட்காட்டி விரலே ஜீவாத்மாகிய நீ. என் கட்டை விரலே பரமாத்மாவாகிய நான். ஆம்...மானிடனே! இந்த மூன்று குணங்களையும், நீ விட்டு விட்டாயானால், என்னை நிஜமாகவே அடையலாம்,''என்கிறார்.
யோகபாதாசனத்தில், சற்று கண் திறந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிக்கும் போது, இவரது காலில் சுற்றியுள்ள வஸ்திரம் ஒன்றை அவசியம் கவனிக்க வேண்டும். இதை "யோக பட்டம்' என்பர்.

நெய் அபிஷேகம் :

ஐயப்பன் தரிசனம் முடிந்தபின் கன்னிமூலை கணபதியையும் , நாகரையும் தரிசித்துவிட்டு திருமுற்றத்திலிருந்து இறங்க வேண்டும். குருசாமியுடன் இருமுடி கட்டுகளை பூஜித்து, பூஜைப் பொருட்கள் அடங்கிய முடியினை திறந்து நெய் தேங்காயை உடைக்க வேண்டும்.


அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய கொடுக்க வேண்டும். பின் அபிஷேகம் செய்த நெய்யையும், நெய தேங்காயின் ஒரு முடியையும் சுவாமியின் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து செல்லலாம். இன்னொரு முடியை பதினெட்டுப்படிகளின் முன் உள்ள அங்கினிகுண்டத்தில் எறிந்து விட வேண்டும்.

மஞ்சமாதா :

ஐயப்பன் கோயிலுக்கு இடது பக்கம் மஞ்சமாதா தனிசன்னதியில் அருளுகிறாள். இங்கு மஞ்சள்பொடி தூவி, தேங்காய் உருட்டி வலம் வந்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.இங்குள்ள மணி மண்டபத்தில் தான் ஐயப்பனின் திருவாபரணப்பெட்டி வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். இவளது சன்னதிக்கு அருகில் நாகர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. இங்கு தான் கொடுகொட்டி பாடல் பாடுவது வழக்கம். ஜாதக ரீதியாக சனிதோஷம் உள்ளவர்கள் கொடுகொட்டி கலைஞர்களை பாடச்செய்து மஞ்சமாதாவை வணங்கிவருவர்.

ஜோதி தரிசனம்:

எப்போதும் தவக்கோலத்தில் அருளும் ஐயப்பன், ஆண்டுதோறும் மகரசங்கராந்தி நாளில் மட்டும் திருவாபரணம் அணிந்து முழு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் சன்னிதானத்திற்கு எதிரில் உள்ள ஐயப்பனின் ஐந்தாவது மலையான காந்த மலையில் ஜோதி சொரூபமாக ஐயப்பன் காட்சிதருவார்.  
   
-- Source Dinamalar

  
 

ஐயப்ப தரிசனம் - வழிபாட்டு இடங்கள்

பந்தளம்

சபரிமலையில் இருந்து 88 கி.மீ தூரத்தில் திருவனந்தபுரத்தையும், கோட்டயத்தையும் இணைக்கும் பாதையில் உள்ளது பந்தளம். பந்தள ராஜாவின் குடும்ப கோயில் இங்குள்ளது.மகர விளக்கு திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான திருஆபரண பெட்டி இங்கிருந்துதான் புறப்படுகிறது. மார்கழி 26ம் தேதி பந்தளத்திலிருந்து புறப்படும் திருவாபரணம் தை முதல் தேதி சபரிமலை வந்து சேருகிறது
மகர சங்கிரம தினத்தில் ஜோதிபாய் ஐயன் தெரியும் போது மட்டுமே சபரிமலை ஐயப்பனுக்கு இத்திருவாபரணங்கள் சாத்தப்பட்டிருக்கும்.
ஐயப்பன் திருவுருவில் அணிவிக்கும் ரத்ன மகுடம், நூபுரம், ஆரம், கடகம், அங்குலியங்கள், பதக்கம் ஆகியவை ஒரு பெட்டியிலும், மாளிகைபுறத்தம்மனுக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் மற்றொரு பெட்டியிலும் கொண்டு வருவர். தை முதல்நாள் பிற்பகலில் திருஆபரண பெட்டி சபரிபீடம் வந்தடையும்போது, வானத்தில் பருந்துகள் தோன்றி வட்டமிட்டு, திருஆபரண பெட்டியுடன் தொடர்ந்து வரும் காட்சி கண்கொள்ள அதிசய காட்சி.
ஐயனுக்கு திருஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சங்கிரம தினத்தின் அந்திம நேரத்தில் மங்களகரமான தீபாராதனை காண பத்தணம்திட்டா (10 கி.மீ), ஆரமுளா (10 கி.மீ), எருமேலி (52.கி.மீ), ஆகிய இடங்களுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளன. தங்கும் விடுதி வசதியும் இங்கு உண்டு. இது தவிர பெட்ரோல் பாங்க். பாங்க் வசதி கூட உண்டு.


குளத்துப்புழை


செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது குளத்துப்புழை. சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கோயிலின் வாசல் அமைந்திருக்கும். சன்னதியில் பாலகன் வடிவில் தவழ்ந்த கோலத்தில் ஐயப்பன் காட்சி தருகிறார்.
விஜயதசமியன்று வித்தியாரம்பம் என்ற பெயரில் இங்கு நடக்கும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு பள்ளியில் குழந்தையைச் சேர்த்தால் கல்வியில் குழந்தை தேர்ச்சி பெறும் என்பது ஒரு நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டி வருவோரின் துன்பமும் தீரும். கோயில் முன்பு மீன்கள் துள்ளி விளையாடும் ஆறும் ஓடுகிறது. குடும்பத்துடன் சென்று ஐயப்பனை வழிபட ஏற்ற தலம்.


ஆரியங்காவு கல்யாண கோலத்தில், குமார சொரூபத்தில் ஐயப்பன் குடிகொண்ட கோயில். திருவனந்தபுரத்தில் இருந்து 66 கி.மீ தொலைவில் உள்ள இக்கோயில் தமிழகத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது.
செங்கோட்டையிலிருந்து ஆரியங்காவுக்கு அடிக்கடி கேரள அரசு பஸ்கள் சென்று வருகின்றன. மதுரையை சேர்ந்த புஷ்கலாதேவி என்ற பெண் இங்கு ஐயனோடு ஐக்கியமானதாக வரலாறு கூறுகிறது. இதன் மூலம் சமபந்தி ஆகியுள்ள மதுரை சவுராஷ்டிர மக்கள் ஆண்டுதோறும் மண்டல பூஜையின்போது இங்கு வந்து ஐயனுக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தி விருந்த வைக்கின்றனர். 3 நாட்கள் நடைபெறும் வண்ணமயமான இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வருவர்.

பதினெட்டாம் படிமகரஜோதியின் தத்துவம்

இறைவனுக்கென்று உருவ வழிபாடு பிற்காலத்தில் தான் இருக்க முடியும். ஏனெனில் மனிதன் தோன்றிய காலத்தில் உலோகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. கற்களில் துவங்கிய சிற்பக்கலை படிப்படியாக வளர்ந்து, பிற்காலத்தில் ஐம்பொன் வரை சென்றது. எனவே மனிதன் துவக்க காலத்தில் ஒளியையே தெய்வகமாக வழிபட்டுள்ளான். ‘ரிய வழிபாடு முதலில் தோன்றியது.

நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என மனிதன் பகுத்தறிந்த போது ஜோதி வடிவாக அவன் இறைவனைக் கண்டான். அதனால்தான் வள்ளலார் இறைவனை அருட்பெருஞ்ஜோதி என அழைத்தார்.
இறைவன் திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி அளிக்கிறார். கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபம் ஆண்டு முழுவதும் எரிவது அதனால் தான். இதே போல் தான் ஐயப்பசுவாமியும் ஜோதி வடிவாக காட்சி அளிப்பது, பொன்னம்பல மேட்டில் மகரசாந்தியன்று அவர் ஆண்டுதோறம் இந்த கலிகாலத்திலும் ஜோதி வடிவாய் காட்சி அளிக்கிறார்.


--Source Dinamalar
பதினெட்டாம் படி பாலகன் வரலாறு்


அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்த நேரம் அது....

தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்க மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார்.

சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.

தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் ‘ட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.

எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். ராஜராஜன் என்ற அந்த ராஜகுமாரன் எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன், மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதை உணர்ந்த மந்திரி, மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும், வசதிகளும் போய்விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது ‘ழ்ச்சியால் புலிப்பால், கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான்.

இது ‘ழ்ச்சி என்று தெரிந்தபோதிலும், மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறனர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை தேவலோகத்தில் நின்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.

ஐயன் அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாதுஎன்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கிவர ஐயன் அருள் செய்தார்.

மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியும், பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர்.

மணிகண்டனும், மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.

மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார்.

ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

அச்சம் தீர்க்கும் அச்சன் கோவில்

அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி தமிழக, கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை ‘ழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது.
ஐயப்பன் பாலகனாக வளர்ந்தது குளத்துப்புழையில்.

இளைஞனானதும் அவர் அச்சன்கோயில் வந்தார். சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது அச்சன்கோவில் ஆகும்.அச்சன்கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. பல தலங்களில் உள்ள ஐயப்பன் விக்கிரகங்கள் தீயாலும், இதர ஐயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து மாற்றப்பட்டவை. ஆனால் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டும் பழைய விக்ரகம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாதம் 30ம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து அச்சன்கோவில் அரசனுக்கு திரு ஆபரணங்கள் கொண்டுவரப்படும். மார்கழி முதல்நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா நடக்கும். ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது சபரி மலையிலும் அச்சன் கோயிலிலும் மட்டமே ஆகும். அச்சன்கோவிலில் நடக்கும் விழாவில் 9வது நாளன்று தேரோட்டம் நடத்தப்படும். மற்ற ஐயப்ப தலங்களில் தேரோட்டம் கிடையாது. இந்த கோயிலுக்கு ஒரு விசேஷமுண்டு. விஷப்பூச்சிகள் தீண்டினால் நள்ளிரவு நேரமானாலும் நடை திறக்கப்பட்டு ஐயப்பனின் விக்ரகம் மீதுள்ள சந்தனத்தை பூசினால் விஷம் நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதற்காக வைத்தியரை நாடி யாரும் செல்வதில்லை.

ஐயப்பனின் வாழ்வில் வாபரின் பங்கு 

வாபர் ஒரு இஸ்லாமியர். கொள்ளைக்காரனாக இருந்தனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்தார். அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை. எனவே அவர்கள் ஐயப்பனிடமே இதுபற்றி முறையிட்டனர்.
ஒருமுறை ஐயப்பன் வாபரை காணச்சென்றார். குழந்தையாக இருந்த ஐயப்பன் வாபருக்கு எச்சரிக்கை விடுத்தார். என்னைக் காணவரும் பக்தர்களை துன்புறுத்தினால் உன்னை அழித்துவிடுவேன் என்று கூறினார். இரக்க குணமுள்ள வாபர் சிறுவனான ஐயப்பனை பார்த்து, நீ என் குழந்தை போல இருக்கிறாய். உன்னை எப்படி நான் கொல்லுவேன். என்னை நீ துன்புறுத்தாதே. போய்விடு என்றார். இதற்கெல்லாம் கலங்காத ஐயப்பன் வாபரை கொல்ல முயன்றார். உடனே வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றார்.
அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அத்துடன் எனது கோயிலக்கு வரும் பக்தர்கள் உனது இடத்துக்கும் வருவார்கள். அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

இதன்படி சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

--- Source Dinamalar