Pages

Tuesday, May 17, 2011

பௌர்ணமி நிலவே!




என் வளர்பிறை நிலவே
இலக்கணம் பார்க்கவில்லை உன் மனதின் மழலை பேச்சிற்கு


உனை பார்க்க துடிக்கிறேன்
என் நாடித்துடிப்பை நானே எண்ணி பார்க்க ஆரம்பித்த நாளில் இருந்து 


மயக்கமும் , சோர்வும் தான் என்றாலும் பொறுத்து கொண்டேன்
அது உன்னால் ஏற்பட்டது என்பதனால்


எத்தனை முறை ஒவ்வாமை ஏற்பட்டாலும் உண்ண மறுக்கவில்லை,
உன் சிறு உடல் தழைப்பதற்காக


இன்னிசைக்கே அடிமை ஆகாத என் மனம்
உன் அதிவேக இதய துடிப்பை மட்டும் மண்டியிட்டு கேட்கிறது


உன் அழகை கண்டு பெருமைப்பபட்டு கொண்டேன் - உனை
அதிநவீன அறிவியல் சாதன உதவியுடன் அரை குறையாய் பார்த்த பொழுதுகளில்


பல இரவுகளில் தூக்கம் தவிர்த்தேன் - நீ 
தூக்கம் இன்றி எனை உதைத்து விளையாடுவதை ரசிப்பபதற்காக


மௌன விரதம் இருந்தேன் என் வளர்பிறை வயிற்றினுள்
நீ அசைவற்று உறங்கிய நேரங்களில் எல்லாம்


தவம் இருக்கிறேன் என் நிலவு தன் முழு உருவம்
காட்ட போகும் அந்த பௌர்ணமி நாளுக்காக




இந்த கவிதை என்வலையுலக தோழி மிதிலா என்பவருடையது ,தாய்மைப்பேரின் அழகியலை மிகவும் கவித்துவமாக எழுதியுள்ளார் .எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் இதுவும் என்றும் நிலைத்திருக்கும்.
அவரின் வலைபூவிற்கு செல்ல http://mithilathewriter.blogspot.com/2010/07/blog-post_07.html

சொல்லப்படாமலே இருக்கட்டும்.....


என்னுயிரே!
உலகில் பெண்களிடம் சொல்லப்படும்
ஆண்களின் காதல் அனைத்தும்
பெண்களால் கொள்ளப்பட்டு
கடைசியில் கல்லறைதான்
காண்கிறது என்றால்...


என் காதல் மாத்திரம்
உன்னிடம் சொல்லப்படாமலே
இருக்கட்டும்.....




- என்  நண்பனின் facebook status லிருந்து எடுத்தது. 

Wednesday, May 11, 2011

இந்தாண்டு கட்-ஆப் எப்படி?


கடந்தாண்டை விட, இந்தாண்டு, மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுத்துள்ளதால், முக்கிய இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான கட்-ஆப் மதிப்பெண் உயரும் வாய்ப்புள்ளது.


அதே சமயத்தில் தர அங்கீகாரம் பெற்றுள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் 60 இடங்களை உயர்த்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அது கிடைக்கும் பட்சத்தில், கடந்தாண்டு கட்-ஆப் மதிப்பெண்ணில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விடாது" என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார். இதனால் கட்-ஆப் உயருமா... உயராதா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 


கணிதத்தில் 100 (200க்கு) மதிப்பெண்களும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா 50 (200க்கு) மதிப்பெண்களை கூட்டி இன்ஜினியரிங் கட்-ஆப் 200க்கு கணக்கிடப்படுகிறது.
தமிழகத்தில், 484 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இங்கு அண்ணா பல்கலை கவுன்சிலிங் வழியாக நிரப்புவதற்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் உள்ளன. 




விண்ணப்பிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் இடங்கள் கிடைக்கும் என்றாலும், விரும்பிய கல்லூரியில், விரும்பிய பாடத்தை பெறுவது, தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தான். இதற்கான கட்-ஆப் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவது சவால்களை ஏற்படுத்தியுள்ளது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் ஏராளமானோர் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாலும், சமமான கட்-ஆப் மதிப்பெண்களையும் பலர் பெற்றுள்ளதாலும் கடந்தாண்டுகளை விட, இந்தாண்டு இடங்களை பெற மாணவர்கள் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.


தற்போதைய தேர்வு முடிவின்படி, கணிதத்தில் 2,697, இயற்பியலில் 647 மற்றும் வேதியியலில் 1,243 பேர் 200க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளனர். கடந்தாண்டை விட இந்த எண்ணிக்கை மிக அதிகம். எனவே, கட்-ஆப் கணக்கிடப்படும் இந்த பாடங்களில் சதம் எடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்க இந்தாண்டு கடுமையான போட்டி தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது.


இதுகுறித்து ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது, "ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் திறன் அதிகரித்தே வருகிறது. அவர்கள் எடுக்கும் மதிப்பெண் அதிகரித்து வருகிறது. இது கட்-ஆப் மதிப்பெண்ணை உயர்த்தி விடுகிறது. பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஒருபுறம் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு இன்ஜினியரிங் கட்-ஆப் 1 - 2 மதிப்பெண் உயரும் வாய்ப்புள்ளது.


கடந்தாண்டு 195 கட்-ஆப் மதிப்பெண் எடுத்த மாணவருக்கு கிடைத்த இடம், இப்போது 196 கட்-ஆப் எடுத்திருந்தால் தான் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறையின்படி, தர மதிப்பீடு பெற்றுள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் 60 இடங்களை அதிகரித்து கொள்ளும் வாய்ப்புள்ளதால், மொத்தம் 9,000 இடம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்படியானால், முக்கிய கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கடந்தாண்டு கட்-ஆப் மதிப்பெண்ணில் இம்முறை பெரியளவில் மாற்றம் இருக்காது" என்று கூறினார்.


கடந்தாண்டு கட்-ஆப் 195 மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 5,651. இந்தாண்டு இந்த எண்ணிக்கையில் 1,879 உயர்ந்து, 7,530 பேர் இந்த மதிப்பெண்ணை எடுத்துள்ளனர். இந்தாண்டு 197க்கும் மேல் 4,294 பேர் எடுத்துள்ளனர். 197 மதிப்பெண் எடுத்த மாணவர்களே இம்முறை "டாப்" இன்ஜினியரிங் கல்லூரிகளில் தாங்கள் விரும்பிய பாடங்களை எடுக்கும் எளிய வாய்ப்பினை பெற்றுள்ளனர். கடந்தாண்டு கட்-ஆப் மதிப்பெண் 185க்கும் மேல் எடுத்தவர்களின் எண்ணிக்கை 21,086. இந்தாண்டு இந்த எண்ணிக்கை 24,128 ஆக உயர்ந்து விட்டது. இந்தாண்டு கணித பாடத்தில் 200க்கு 195 மதிப்பெண்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 13,383. கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 9,903 ஆக இருந்தது. 


இந்தாண்டு இயற்பியல் பாடத்தில் 200க்கு 195 மதிப்பெண்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 9,128. கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 6,910 ஆக இருந்தது. இந்தாண்டு வேதியியல் பாடத்தில் 200க்கு 195 மதிப்பெண்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 10,414. கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 8,732 ஆக இருந்தது. தமிழ் வழி இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள், அரசு கல்லூரிகளில் இடம்பெற வாய்ப்புண்டு. கடந்தாண்டு தமிழ் வழி இன்ஜினியரிங் படிப்பில் 180 கட்-ஆப் மதிப்பெண்ணுக்குக் கூட, அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. தற்போது மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண் அடிப்படையில், தங்களுக்கு கிடைக்கக்கூடிய கல்லூரி மற்றும் படிப்புகளின் பட்டியலை, இப்போதே தயார் செய்து கொள்ளவது கவுன்சிலிங் சமயத்தில் உதவும்.


மருத்துவ கட்-ஆப் எப்படி?


உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியலில் சதம் எடுத்தவர்களும், அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. கீழ்கண்ட உத்தேச பட்டியல் அடிப்படையில் கட்-ஆப் பெற்றவர்களுக்கு மருத்துவப் படிப்பு பெறும் வாய்ப்புள்ளது. கடந்தாண்டை விட அதிகபட்சமாக 2 கட்-ஆப் மதிப்பெண் இம்முறை உயர்ந்துள்ளது.


இந்த ஆண்டில் கூடுதல் இடங்களுக்காக (250 இடங்கள்) சில மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. அந்த கல்லூரிகள் கூடுதல் இடங்கள் பெறும்பட்சத்தில் அதிகபட்ச கட்-ஆப் உயர்வு கொஞ்சம் தளர்ந்து 0.5 முதல் 1 வரை மட்டுமே கட்-ஆப் உயர்வு இருக்கும். இது பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் ஆறுதலான செய்தி.


-- நன்றி தினமலர்

Wednesday, May 4, 2011

நீயா நானாவில் - உங்களுக்கு பிடித்த உணவு என்ன?










போன வரம் நீயா நானாவில் ஒரு அருமையான விவாதம் (நான் முழுசா பாக்கல,அது வேற விஷயம் ) நாம் விரும்பும் உணவு வகைகள் பற்றி பேசிகொண்டிருந்தார்கள்.அதுல கோபிநாத் ஒரு கேள்வி கேட்டார் உங்களுக்கு பிடித்த உணவு என்ன என்று ,நெறைய பதில் வந்தது .நெறைய பேர் மீன் குழம்பு பிடிக்கும்னு சொன்னங்க அதுவும் இரவுல மீன் கொழம்ப வைத்து அதை காலையில பழைய சாதத்திற்கு சேர்த்து சாப்டா அந்த ருசியே தனி அப்படின்னு நெறைய பேர் சொன்னங்க.


ச்சே என்ன அருமையான ரசனை நம்ம ஆளுங்களுக்கு.ஆம் நம்ம ஊர்ல நெறைய மக்கள் அதை விரும்புவாங்க.எனக்குத்தான் சின்ன வயசிலிருந்து மீன் என்றாலே ஆகாது அதனால நான் அந்த "நேத்து வச்ச மீன்குழம்பு " அருமைய நான் அறியவில்லை.நமக்கு கத்திரிக்கா இல்ல வெண்டக்க இல்லனா சுண்டக்கா காரக்குழம்ப காலையில பழுதுக்கு சேர்த்து சாப்டா எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடலாம்.அதன் ருசியே தனி எந்த சரவணபவனிலும் கிடைக்காது .


அப்புறம் எனக்கு பிடிச்சத சொல்றேன்-- > நான் எட்டாவது படிக்கறவரை என் பாட்டி(அப்பாவோட அம்மா-நான் எட்டாவது படிக்கும் போது இறந்துட்டாங்க) தயிர் சாதம் பிசைந்து நல்லா கொழகொழன்னு தருவாங்க அதை சாப்பிடவே செம சூப்பரா இருக்கும் அதேபோல கீரைய கடைந்த கல்செட்டியிலேயே கொஞ்சம் சாதம் போட்டு நல்லா கலரி உருண்டை உருண்டைய பிடிச்சி எங்க எல்லாருக்கும் கொடுப்பாங்க ,ச்சே அந்த அருமையான தருணங்கள் மறக்கமுடியாதவை ,அந்த சுவையும் மறக்கமுடியாது.


நான் பத்தாவது படிக்கறவரை எங்க வீட்ல ஹோட்டல் வியாபாரம்தான் அதனால அண்ணன் அப்போஎல்லாம் நல்லா சாப்ட்டு கன்னமெல்லாம் வீங்கி கொழு கொழுன்னு இருந்தேன்.இப்போ நம்ம தனுஷ் போல ஆகிட்டேன்(விடுங்க பாஸ் வாழ்கையில இதெல்லாம் சகஜம்),அப்போ எங்க அப்பா அம்மா செய்ற சாம்பார் சூப்பரா இருக்கும் .இங்க சென்னைல இட்லிக்கு என்ன சாம்பார் செய்றாங்க நாங்க அப்போ எப்படி செய்வோம் தெரியுமா ?நீங்க வேனும்ன ட்ரை பண்ணிபாருங்க.


ஒண்ணுமில்ல தேவைக்கேற்ப காரட் ,கத்திரிக்காய் ,சௌசௌ ,முள்ளங்கி இதஎல்லத்தையும் துவரம் பருப்பு போட்டு(எண்ணெய்,தக்காளி ,வெங்காயம் ,உப்பு ,மிளகாய்த்தூள் எல்லாம் சேர்த்து )கொதிக்க வைத்தபின் அதை நன்றாக வடிகட்டி அதாவது காய்கறி மற்றும் பருப்பினை மட்டும் தனியாகவும் அண்ட் தண்ணீரை தனியாகவும் பிரித்தபின் ,காய்கறி மற்றும் பருப்பினை நன்றாக அரைத்து(கல்சட்டி அல்லது கிரைண்டர் மூலமாக ) பின் அதை அந்த பிரித்த தண்ணீரில் கலந்து மீண்டும் கொதிக்கவைத்து தாளித்து இறக்கினால் சாம்பார் ரெடி.அந்த சாம்பாருக்கும் இட்லிக்கும் என்ன ஒரு டேஸ்ட் தெரியுமா சும்மா இட்லி போய்ட்டே இருக்கும் .இப்பவும் எங்க வீட்ல இந்த சாம்பார் தான் முதன்மை.


அப்புறம் பூரி கிழங்கு ,வடைகறி ,எங்க கடையில செய்ற மெதுவடை ,மசால் வடை ,மிக்சர்,வெங்காய பக்கோடா,வெஜிடபுள் போண்டா ,இப்படி நெறைய பிடிக்கும்.எங்க ஹோட்டெல நாங்க மார்கழி மாதத்துல காலையில மட்டும் டீ கடை வைப்போம் .அப்போ அந்த மார்கழி குளிருல எங்க அப்பா நல்லா பால கயவச்சிட்டு இருப்பாரு நான் ஒரு விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து போனவுடன் அந்த கொதித்த பாலோடு சேர்ந்த பாலின் மீது படர்ந்த ஏடினை தனியே எடுத்து அதில் சர்க்கரைய போட்டு கொடுப்பாங்க சும்மா சூப்பரா இருக்கும் அது.


போதும் போதும் இப்படியே உன் சாப்பாட்டு புராணத்த சொல்லாதேனு நீங்க அழுவறது எனக்கு புரியுது கவலையே வேண்டாம்  இன்னும் சில மட்டும் . 


நம்ம ரசம் சாதத்திற்கு சும்மா வறக்குற  கருவாடுனு சொல்லுவாங்க(பெருசா இருக்கும்பா) அதை வறுத்து ரசம் சாதம் சாப்டா ஹ்ம்ம் ஹ்ம்ம் எவ்ளோ வேணும்னாலும் சாப்டலாம் என்ன அதை வறுத்தால் உங்க தெரு முனைவரை வாசம் வீசும்.அதேபோல ரசத்திற்கு வறுகடலை துவையல் சூப்பரா இருக்கும்.அப்புறம் நம்ம கேழ்வரகு கூழ் செய்து அதை கரைத்து அதுல கொஞ்சம் வேர்கடலை போட்டு அது இல்லனா கொஞ்சம் மாங்காயோ இல்ல வெல்லமோ கடித்து சாப்டா நல்லா இருக்கும்.அதுவும் இந்த கோடையில இதுதான் சிறந்தது .


சரிசரி நாக்குல ஜொள்ளு வழியுது பாருங்க தொடைசிட்டு போய் வேலைய பாருங்க.

Tuesday, May 3, 2011

தெய்வத்திருமகள்




பாரதகதையினிலே தோன்றிய அரவானை 
திருமணம் செய்வதற்காக திருமால் எடுத்த 
மோகினி அவதாரமே உன் பிறப்பிடமோ ?


திருமால் தெய்வம் என்பதால் அவனை வணங்குகின்றனர் 
நீயோ மானிடப்பிறவி என்பதால்தான் வெறுக்கின்றனரோ ?
பாவம் அவர்களுக்கு தெரியாது நீ தான் உயர்ந்தவள் என்று ,
திருநங்கையான நீதான் தெய்வத்திருமகள் என்று!


மனிதர்களை நேசிக்காத இந்த மானிடப்பதர்கள் 
உன்னை எட்டிற்கும், பத்திற்கும் இடைப்பட்ட 
எண்ணை கொண்டு அழைக்கின்றனர் - ஆனால்
அவர்களுக்கே தெரியாது அது கிண்டல் அல்ல உண்மை என்று 
ஆம் நீதான் அஷ்ட லட்சுமிகளோடு சேர்த்து 
வணங்கக்கூடிய ஒன்பதாவது லட்சுமி ஆவாய்!


உன் தோற்றத்தினை பார்த்து ஏளனம் செய்கின்றனர் 
இதில் ஆண்கள் மட்டுமல்ல பல பெண்களும் உன்னை வெறுக்கின்றனர் 
உன்னிலும் பலர் தன் திறமையினை அறியாமல் 
பாலியியல் மற்றும் பிச்சை எடுத்து தங்கள் பெயரினை கெடுத்துக்கொள்கின்றனர்!


நான் உணர்கிறேன் இதற்கு சமூகமும் ஒரு காரணம் என்று,
ஏய் சமுகமே ஊனமுற்றவர்களை ஏற்றுக்கொள்கிறாய் 
ஏன் இந்த திருநங்கைகளை ஏற்க தயங்குகிறாய்!


தயக்கமே வேண்டாம் அவள் வேறுயாருமல்ல நம்முடம் 
நம்மைபோலவே இவ்வுலகினை நேசிக்க பிறந்த தெய்வத்திருமகள் !

Wednesday, April 27, 2011

மன்னித்துவிடு என் தோழியே



உனை கண்ட நொடிபோழுதினில் இருந்து

ஏதோ ஒரு நினைவலைகள் நெஞ்சில்

படர்ந்து, என் மனதில் நிறைந்து ஒருவித அன்பாகி

முப்பொழுதும் என் கற்பனையில் உனைநினைத்து

உன்பெயரை மட்டுமே வைத்து உனைப்பற்றிய

தகவல்களை நீ அறியாமல் சேகரித்தேன்

நான் உணருகிறேன் இது தவறு என்று,

உன்னிடம் நட்பு கொள்ள நான் ஏங்கிய நாட்கள்

நான் மட்டுமே அறிவேன்!அதிசயமாய் ஒருநாள்

உன்னிடம் பேச வாய்ப்பு கிடைத்தது அன்றும்

நான் கேட்ட கேள்விகளுக்கு நீ பதில் சொன்னாயே தவிர

நீயாக எதுவும் கேட்கவில்லை வேண்டாவெறுப்பாக பேசினாய் என்னோடு

பின் நானாக வலியவந்து உன்னிடம் பேசினேன்!

பின் மின்னஞ்சல் கலந்துரையாடல் மூலம் நம் நட்பை வளர்த்தேன்

அப்பொழுதும் நீங்கள் வேண்டாவெறுப்பாக மட்டுமே பேசியதாக

நான் உணர்ந்தேன்! காலம் உங்கள் மீது நான் அளவுகடந்த அன்பு வைத்ததாலோ

என்னவோ? உங்களிடம் பேச வாய்ப்பாக இருக்குமென்று நினைத்து

உங்கள் அலைபேசி எண்ணை கேட்டுவிட்டேன், நானும் உணர்ந்தேன்

அந்த அணுகுமுறை தவறென்று, நீங்களும் தரவில்லை அலைபேசி எண்ணை,

எனக்கு உங்களிடம் பிடித்ததே இந்த அமைதியான குணம்தான்

நானே என்னை நினைத்து வெட்கப்படுகிறேன் நான் உன்னிடம்

மன்னிப்பு கேட்டுவிட்டாலும் என் மனதில் ஏனோ ஒரு குற்றஉணர்வு

அதனால் தான் இப்போதும் மன்னிப்பு கேட்க துடிக்கிறது என் மனம்

தயவுசெய்து மன்னித்துவிடு என் தோழியே! நாம் நட்பினை தொடர்ந்திடுவோம் இனியே!

சும்மா ஒரு ஹைக்கூ


அவன் பார்க்கும்முன் அவள் பார்வை அவன் மேலிருக்கும்!
அவன் அவளை பார்த்தபின் அவள் பார்வை தரை மீதிருக்கும்!
இதற்கு பெயர்தான் நாணமோ?குழம்பித்தான் போகிறான் அவன்!

Monday, April 18, 2011

இவர்களுக்கும் தண்ணீர் வைப்போம்


கோடைக்காலம் வந்து விட்டது எங்கெங்கும் ஒரே வெயில் ,வெப்பம் தாங்க முடியதாளவிற்கு வாட்டி வதைக்கிறது.நம் அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் (சும்மா ஒரு பந்தாவுக்கு ),சில சமுக அமைப்புகளும் தண்ணீர் பந்தல் போட தயாராகிவருகின்றன. நாமும் இந்த வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க முயன்ற அளவு தண்ணீர்,குளிர்பானம் ,பழச்சாறுகள்,இளநீர் ,தர்பூசணி,வெள்ளரி,பனங்காய் ,கூழ் போன்று பல வகைகளில் நம் தாகத்தினை போக்கிகொள்கிறோம். ஆனால் நம்மிலேயே பலர் இந்த வெயிலில் வேலை செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர் ,அவர்களுக்கு தேவையான குடிநீரை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்,அதற்காக உங்களால் முடிந்தால் உங்கள் இருப்பிடத்தில் ஒரு தண்ணீர் பந்தல் அமைக்கலாம்.இது சாத்தியமே.


ஆனால் நாம் மனிதர்கள் எப்படியாவது இந்த வெயிலை பொருட்படுத்திக் கொள்வோம் .எல்லா காகங்களும் புத்திசாலிகள் அல்ல,எல்லா காகங்களுக்கும் கற்கள் கிடைப்பதில்லை ,கற்கள் கிடைத்தாலும் குடிநீர் உள்ள பானை கிடைப்பதில்லை.ஆம் நான் சொல்லவருவது இதுதான் நம்மை விட கவனிப்பாரற்று இந்த புவியில் நிறைய உயிரினங்கள் உள்ளன.பறைவைகள் ,வீடு பிராணிகள் ,செல்ல பிராணிகள் ,மற்றும் பல உயிரினங்கள் ,காட்டு விலங்குகள் (நம்மால் அதன் அருகே செல்ல முடியாது அது வேறு விஷயம் ) இப்படி எத்தனையோ உயிரினங்கள் .அவைகளும் இந்த கோடைகாலத்தில் வாடிவிடும் என்பதில் ஐய்யமில்லை.


இந்த வாரம் புதிய தலைமுறை வார இதழில் வந்த ஒரு கட்டுரையில் பறைவைகளுக்கு தண்ணீர் வைப்போம் என்று எழுதி இருந்தார்கள் .ஆம் நம்மால் முடிந்த அளவிற்கு நம் வீட்டின் மேற்கூரையிலோ அல்லது தகுந்த இடத்தினிலோ ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் வைத்து விட்டால் ,அது எதாவது ஒரு உயிரினத்திற்கு உதவிகரமாக இருக்கும் .இதற்கு நாம் ஒன்றும் கஷ்டப்பட்டு செய்யபோவதில்லை ,நம் ஒய்வு நேரத்தில் செய்தாலே போதும்.இந்த அவசர உலகத்தில் நாம் சிரிப்பதையும் ,மற்றவர்களிடம் மனம் விட்டு பேசுவதையும் மறந்த பொம்மைகளாகி விட்டோம். குறைந்தது இப்படி ஒரு சிறிய உதவியாவது செய்ய நாம் முயலுவோமே . 

இதயமும் கூட அழுகிறது


நான் உன்னைப்பற்றி அறிய உன்னிடம் பேசும்பொழுது
நீ முகம் கொடுக்காமல் பேசும்பொழுதும் சரி,
கணினி வழியே கலந்துரையாடும்போது நீ
இடையிலேயே பதிலளிக்காமல் துண்டிகும்போதும் சரி,
அழுவது என் கண்கள் மட்டுமல்ல
என் மனசும், இதயமும் கூட அழுகிறது!

Monday, March 28, 2011

பரிட்சியமில்லா குட்டி தேவதை


நேற்று(27-03-2011) PVR cinemasla சிங்கம் புலி படத்திற்கு என் ரூம் நண்பர்களுடன் இரவு காட்சிக்கு சென்றிருந்தேன்.படம் ஒரு 10.15 PM  மணிக்கு தொடங்கியது.நான் N வரிசையில் உள்ள 10 ம் எண் இருக்கையில் அமர்ந்தேன்.அது அந்த வரிசையில் முதல் இருக்கை ஆகும் ,என் இருக்கையின் இடதுபுறத்தில் உள்ள இருக்கைகளில் என் நண்பர்கள் உட்கார்ந்து கொண்டார்கள்.என் வலதுபுறம் நடப்பதற்காக நீண்ட இடைவெளி அதற்கு அடுத்து வரிசையாக இருக்கைகள்.


படம் அரம்பித்தவுடன் ஒரு கணவன் ,மனைவி,மற்றும் 3 வயதுடைய அவர்களின் குழந்தை என மூவரும் என் வலதுபுறத்தில் உள்ள இடைவெளிக்கு அடுத்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள்.வந்ததிலிருந்தே அந்த குழந்தை அடம் செய்து கொண்டே இருந்தது.பிறகு அதன் தாய் அதை கஷ்டபட்டு சமாதானம் செய்து சிறிது நேரம் நிம்மதியாக படம் பார்த்தனர்.


சிறிது நேரம் கழித்து அந்த குட்டி பாப்பா அவர்கள் மடியிலிருந்து கீழே இறங்கி விளையாட ஆரம்பித்தது.என்ன நினைத்ததோ தெரியவில்லை, என் இருக்கையின் அருகே வந்தது, நான் அதை பார்த்து ஒரு புன்னகை செய்து கை கொடுத்தேன்,அந்த பாப்பாவும் கை கொடுத்து விட்டு சென்றது.பிறகு அடிக்கடி வந்து என்னிடம் கை கொடுத்து விட்டு சென்றது.அந்த முழு வெளிச்சம் இல்லாத அந்த இருட்டில் சரியாக முகம் தெரியாத அந்த குழந்தை ஒவ்வொரு முறை வந்து கை கொடுத்து விட்டு சென்றது ஏதோ ஒருவித சந்தோஷத்தை தந்தது.எனக்கு படம் பார்ப்பதை விட அந்த குழந்தையின் செயல்களை வேடிக்கை பார்ப்பதையே செய்து கொண்டிருந்தேன்.இடைவேளைக்கு சிறிது நேரம் முன்னால் அந்த குழந்தையை அவங்க அம்மா தூக்கி மடியில் வைத்துக்கொண்டார்கள்.உடனே அந்த குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது ,அவர்கள் சமாதானம் படுத்தியும் அது அடங்கவில்லை.எனவே அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு அந்த அம்மா அப்பா இருவரும் சும்மா வெளியே சென்றார்கள் .எனவே என்னால் அந்த குழந்தையின் முகத்தினை இடைவேளையின் போதும் சரியாக பார்க்க முடியவில்லை .இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்த சில நிமிடங்கள் கழித்து அவர்கள் மீண்டும் வந்து அமர்ந்தார்கள் .இப்பொழுது சிறிது நேரம் அமைதியாக இருந்த அந்த வாண்டு ,பிறகு மீண்டும் கீழே இறங்கி நடக்க ஆரம்பித்து என்னிடம் வந்து மீண்டும் ஒரு புன்னகை ஒரு கை குலுக்கல் செய்து விட்டு சென்றது. 


பிறகு அந்த சின்ன குழந்தை ஒவ்வொரு படிகளை ஏறி இறங்கியது,இதை பார்த்த அதன் அம்மா குழந்தை விழுந்து விடுமோ என்ற கவலையில் அதன் கையை பிடித்துக்கொண்டு அந்த நடக்க உள்ள இடைவெளியில் கடைசி வரிசை முதல் ,முதல் வரிசை வரை அழைத்து சென்றார்கள் ,இப்படியாக ஒரு ஐந்து முறை நடந்தபின்னும் அந்த குழந்தைக்கு எந்த களைப்பும் இல்லை ஆனால் அந்த அம்மா மற்ற பார்வையாளர்களை கருத்தில் கொண்டு குழந்தையை தூக்கிகொண்டு தன் இருக்கையில் அமர்ந்தார் .ஆனால் நம்ம குட்டி தேவதை சும்மா இருப்பங்களா மீண்டும் அடம் சரியென்று அவர்கள் குழந்தையை கீழே இறக்கி விட்டார்கள் .  


நம்ம பாப்பா மீண்டும் என்னிடம் வந்து ஒரு புன்னகை செய்து கைகொடுத்து விட்டு சென்று மீண்டும் தன் நடைபயணத்தை தொடர்ந்தாங்க.அப்போ அவங்க பின்னாடி இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவனிடம் ஒரு சின்ன விளையாட்டு அப்புறம் லேசா கத்த ஆரம்பிச்சாங்க ,உடனே அவங்க அம்மா மீண்டும் நம் தேவதையுடன் நடந்துகொண்டே படம் பார்த்தாங்க .ஒருமுறை நடந்துகொண்டே என் இருக்கையின் அருகே வரும்போது ,நான் அந்த குழந்தையிடம் நடந்துகொண்டே இருக்கீங்களே உங்களுக்கு கால் வலிக்கலீயா போய் உட்காருங்க அப்படீன்னு சொன்னதும் ,ஹுஹூம் அப்படீன்னு இன்னும் என்னென்னவோ தன் மழலை மொழியில் பேசியபடியே தன் நடையை தொடர்ந்தாள் .கடைசியில் படம் முடிந்த பின் அந்த குழந்தைக்கு ஒரு ஹாய் மற்றும் bye சொல்லநினைதிருந்தேன்,ஆனால் படம் முடிந்தபோது அந்த குழந்தை அவளின் அம்மாவுடன் அந்த அரங்கத்தின் அடுத்த ஓரமாக நடந்து கொண்டிருந்தாங்க .என் நண்பர்கள் கிளம்ப நிர்பந்தித்ததால் வேறு வழியின்றி அந்த குட்டி தேவதையினை பார்த்துக்கொண்டே அரங்கத்தை விட்டு வெளியே வந்தேன்.


கடவுள் எவ்வளவு அற்புதமானவர் ,நம்ம வாழ்க்கையில் கஷ்டத்தையும் கொடுத்து அதுக்கான மருந்தையும் தருகிறார் ,நாம் தான் சரியான மருந்தை தேர்வு செய்வதில்லை .நெறையபேர் நினைச்சிருக்கலாம் படம் பார்க்க ஏன் குழந்தையை இரவு காட்சிக்கு கூப்பிட்டு வந்து நம்ம உயிரை வங்கராங்கனு,ஆனால் இன்று நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு மத்தியில் இந்த மாதிரியான சுகமான தடைகள் தடைகளே அல்ல .அந்த குழந்தையின் அம்மாவிற்கும் இது தோன்றியிருக்கலாம் ச்சே ஏன்தான் குழந்தையை கூப்பிட்டு வந்தோமோ என்று ,ஆனால் அந்த அம்மாவே நினைத்தாலும் இதுபோன்ற ஒரு நடைபயண அனுபவத்தினை எப்போதும் அனுபவிக்க முடியாது அந்த அறிய சந்தர்பத்தினை ஏற்படுத்திய அந்த சின்ன தேவதை , சக மனிதர்களை கண்டு பொறாமைபடும் இந்த உலகத்திலே அடே முட்டாள்களே மனிதர்களை நேசியுங்கள் என்று சொல்லும் ஒரே உள்ளம் இந்த கள்ளமற்ற குழந்தைகள் தான்.எனக்கு முன்பின் தெரியாத அந்த குட்டி தேவதை என்னிடம் வந்து தன் பிஞ்சு கரங்களை நீட்டி ஒரு மழலை சிரிப்பு சிரித்தபோது என் உள்ளத்தில் இருந்து எழுந்து என் உதட்டில் உதிர்ந்த அந்த புன்னகையில் என் மனம் இளகிப்போனதை அறிந்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன் .தெரியாது மீண்டும் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையுமா என்று ஆனால் என்றும் என் நினைவுகளில் நிழலாடும் ,மனிதர்களை நேசியுங்கள் ,குறைந்தது குழந்தைகளை நேசியுங்கள் ,வாழ்க்கையின் அர்த்தம் புலப்படும் .

Thursday, March 24, 2011

ஒரே ஒருமுறை

அழகான ரம்மியமான மாலைப்பொழுது ,கதிரவனின் கதிர்கள் மேற்கு திசையில் மறைந்து , சந்திரனின் குளுமை பரவ தொடங்கும் நேரம் அது, மாலையின் முடிவிற்கும் இரவின் தொடக்கத்திற்கும் சில மணித்துளிகளே உள்ள அந்த இனிமையான நேரம் ,சென்னை மாநகரின் வெளிப்புறத்தே உள்ள
ஒரு அமைதியான பகுதியில் ஒரு பணக்கார வீட்டு அம்மா பெயர் இலட்சுமி தன் அழகிய மூன்று வயது குழந்தை ஸ்ருதியுடன் சந்தோசமாக கொஞ்சி கொஞ்சி விளையாடிக்கொண்டிருகிறாள்.

அம்முகுட்டி ,என் செல்லம் ,என் பட்டுல்ல இங்க வாம்மா என்று கொஞ்சியபடியே தன் குழந்தைக்கு ஏதோ உணவினை ஊட்டிக்கொண்டிருந்தாள்.ஹ்ம்ம் வேணாம் போ ,போ என்று தன் மழலை குரலில் சுருதி அடம்பிடித்தாள்.

இப்படியாக அம்மாவும் பிள்ளையும் ஒருவரை ஒருவர் கொஞ்சி கொஞ்சி விளையாடியதை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.தன் மகளிடம் விளையாடியபடியே தன் வீட்டு வெளியே பார்த்தாள்,
அங்கு யாரோ ஒரு இளம் பெண் தங்களையே கவனித்துக்கொண்டிருப்பதை பார்த்தாள்.பிறகு தன் குழந்தையுடன் விளையாட்டினை தொடர்ந்தாள்.

ஒரு அரை மணிநேரம் கழித்து மீண்டும் பார்க்கும் போதும் அந்த பெண் அங்கேயே நின்றிருப்பதை கவனித்தாள்.ஹேய் ஹேய் போ போ இங்கெல்லாம் நிற்காதே போ போ என்று அந்த பெண்ணை மடியிலிருந்தபடியே விரட்டினாள் இலட்சுமி.இதை எதிர்பார்க்காத அந்த இளம் பெண் அங்கிருந்து நகர்ந்தாள்.அந்த இளம் பெண்ணிற்கு ஒரு 16 வயது இருக்கும் பார்க்க அழகாக ஆனால் ஏழ்மையாக இருந்தாள்.


அன்று இரவு முடிந்தது ,மறுநாள் மீண்டும் அதே அந்தி வேளையில் இலட்சுமியும் ஸ்ருதியும் விளையாடிக்கொண்டிருந்தர்கள் இப்போதும் அதே பெண் அதே இடத்தில் நின்று கொண்டு இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் .இதை கவனித்த இலட்சுமி சற்று கடினமான குரலில் ஹேய் ஹேய் யார் நீ என்ன வேணும் இப்போ போறியா இல்லயா என்றாள்.

பயந்து போன அந்த இளம்பெண் அங்கிருந்து நகர்ந்தாள்.அன்று இரவு படுப்பதற்கு முன் இலட்சுமி அவள் கணவன் ஆனந்திடம் பேசினாள்.

என்னங்க உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ,டெய்லி ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்கு வெளியில இருந்து என்னையும் நம்ம குழந்தயையுமே பார்த்து கொண்டிருக்கிறாள்.இன்னைக்கு நான் அதட்டின உடனே அவ போய்ட்டா,எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.

ஆமாம் இலட்சுமி கொஞ்சம் ஜாக்கரதையா இரு, இப்போ தான் போன மாசம் கோயம்பத்தூர்ல ஒரு சின்ன பொண்ணையும் அவ தம்பியையும் கடத்தி கொன்னுட்டாங்க பாவிங்க .யாருக்கு தெரியும் இந்த பொண்ண எதாவது கூட்டம் வேவு பார்க்க அனுப்பி இருக்கலாம்.

அய்யய்யோ ! இப்படியெல்லாம் கூட நடக்குமா ?எனக்கு இன்னும் பயமா இருக்கு.

பயப்படாத நாளைக்கு அந்த பொண்ணு வந்தா போலிசுக்கு போன் பண்ணிட்டு அந்த பொண்ண நகராத மாதிரி நம்மகொழந்தையோட எதாவது விளையாடு மற்றதை போலீஸ் பாத்துக்குவாங்க.

சரீங்க.

மறுநாள் அதே நேரம் இலட்சுமி தன் குழந்தையோட விளையாடிகொண்டே அந்த பெண்ணின் வருகைக்காக காத்திருந்தாள் .அந்த பெண்ணும் வந்தாள்,அவள் இவர்கள் இருவரையுமே பார்த்துக்கொண்டிருந்தாள் .உடனே இலட்சுமி அவளுக்கு தெரியாமல் போலீசுக்கு தகவல் தெரிவித்தாள்.

சற்று நேரத்தில் இரண்டு போலீஸ் அந்த பெண் அருகே வந்து , ஹேய் ஹேய் பொண்ணு யாரு நீ ? உனக்கு என்ன வேணும் ?

சார் சார் ஒன்னும் இல்ல சார் சும்மாதான் என்றாள் அமுதா(அந்த இளம் பெண்ணின் பெயர்) .

ஒன்னும் இல்லனா இங்க என்ன வேடிக்கை, என்ன எதாவது திருட வந்திருகிறாயா?
இப்படி கேட்டுக்கொண்டிருக்கும் போதே இலட்சுமி தன் குழந்தையுடன் கீழே இறங்கிவந்து அவர்கள் அருகே நின்றாள்.

சார் ஆமா சார் இந்த பொண்ணு மூணு நாளா இப்படித்தான் இங்க வந்து போகுது ரெண்டு நாளா நான் அதட்டியும் இன்னிக்கும் வந்திருக்குது அதான் உங்களுக்கு போன் பண்ணேன் .

ஹேய் சொல்லு யார் நீ யார் உன்ன இங்க அனுப்புனது என்று சற்று கோபமாக கேட்டார் ஏட்டு.

சார் அவங்க சொல்றது உண்மதான் மூணு நாளைக்கு முன்னால நான் கோவிலுக்கு போய்ட்டு இந்த பக்கமா வரும்போது இவங்களும் அவங்க குழந்தையும் விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்தேன். அந்த அழகில் அப்படியே என்னை மறந்து ரசித்தேன். ஆமாம் சார் நான் பொறந்த உடனே என் அம்மா என்ன பக்கத்துக்கு தெருவுல இருக்குற அனாதை ஆசிரம வாசல்ல யாருக்கும் தெரியாம போட்டுட்டு போய்ட்டாங்க ,அப்புறம் என்னை அந்த ஆசிரமத்துல தான் வளர்த்தாங்க.

எல்லா பிள்ளைகள் போல என்னையும் வளர்த்ததால என்னால் ஒரு தாயின் தாலாட்டை அனுபவிக்க முடியல எப்படியோ வளர்ந்துட்டேன் இப்போ நான் பன்னிரெண்டாவது வகுப்பு படிக்கிறேன் .இவங்க அவங்க கொழந்தையை கொஞ்சி கொஞ்சி விளையாடியதை பார்த்தவுடனே முகமே தெரியாத என் அம்மா ஞாபகம் வந்தது அதான் டெய்லி இங்க வந்தேன்.என்ன என்னை பார்க்க ஒரு ஏழை போல இருப்பதால் அவங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும் ,என்ன பண்றது சார் ஏழை என்றாலே பணக்காரர்களுக்கும் ,சட்டத்திற்கும் ஒரு மாதிரி தான் இருக்கிறது .இது ஏழைகளின் விதி.

ஹேய் இங்க பாரும்மா மன்னிச்சிடும்மா நான் உன்ன தப்பா நினைச்சு போலிசுக்கு போன் பண்ணிட்டேன் .மன்னிச்சிடும்மா -இது இலட்சுமி .

பரவால்லைங்க எனக்கு இது பழக்கம் ஆய்டுச்சு.

சார் நீங்க போகலாம் சார் உங்களுக்கு நன்றி சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று போலீசிடம் சொன்னாள் இலட்சுமி .

சாரி கொழந்த மன்னிச்சுடும்மா ,அப்போ நாங்க வரோம் மேடம் .

இலட்சுமி அந்த அமுதாவிடம் , அமுதா வாம்மா உள்ள போய் பேசலாம் என்றாள் .

இல்லைங்க நான் இன்னொருநாள் வரேன் இப்போ என்னக்கு நேரம் ஆச்சு ,
அப்புறம் அப்புறம் என்று அமுதா தயங்கினாள்.இதை கவனித்த இலட்சுமி
என்ன அமுதா அன்ன ஆச்சு ?

இல்லைங்க நான் ஒன்னு கேட்பேன் தப்பா நெனைக்க மாட்டீங்களே ?

என்னமா கேளு நான் தப்பா நெனைக்கமாட்டேன்.

இல்ல நான் உங்கள ஒரே ஒருமுறை கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்து அம்மா அப்படின்னு கூப்பிட ஆசை .

ஹேய் அமுதா அதுக்கு என்னமா தயக்கம் ,வாம்மா வா என்று கட்டி அணைத்தாள்.

அம்மா அம்மா என்று அமுதா இலட்சுமியை அணைத்து கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தாள்.இலட்சுமியும் அமுதாவின் நெற்றியில் முத்தம் கொடுத்தாள் .அமுதா தன்னை அறியாமல் ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

இலட்சுமி அவளை அப்படியே தன் தோட்டத்திற்கு அழைத்து சென்று ஒரு மேசையின் மேல் அமர்ந்து தன் அருகே அமுதாவை உட்காரவைத்தாள்.குழந்தை ஸ்ருதியை அருகிலே வைத்துவிட்டு தன் மடியிலே அமுதாவினை படுக்கவைத்து அவள் தலை முடியினை கோதியபடியே அவள் தோளில் தட்டி அவளை சமாதானப்படுத்தினாள்.

அந்த தருணம் இருவருக்குமே ஒரு அழகான உணர்வாக இருந்தது.

அமுதா நீ ஏன் எங்களோடவே இருக்க கூடாது என்றாள் இலட்சுமி.

இல்லம்மா எங்க ஆசிரமத்துல நெறைய குழந்தைங்க இருக்காங்க இன்னைக்கு நீங்க எனக்கு கெடைச்சிடீங்க, ஆனா அவங்களுக்கு ?
என்னோடைய லட்சியம் என்னன்னா நான் நல்ல படிச்சி அந்த ஆசிரமத்துல இருக்கிற எல்லா குழந்தைகளுக்கும் அம்மா மாதிரி நடந்துக்கணும் .

நல்லது அமுதா என்றாள் இலட்சுமி .

அம்மா எனக்கு இன்னொரு விருப்பம் எனக்கு எப்போ உங்க நினைவு வந்தாலும் நான் வந்து உங்களையும் தங்கச்சியையும் பார்க்கணும்னு ஆசை அதுக்கு நீங்க அனுமதிக்கணும்

தாராளமா வா அமுதா, இது உன் வீடு என்றாள் இலட்சுமி .

கண்களில் கண்ணீரோடு விடை பெறுகிறாள் அமுதா ,நடப்பதை புரியாமல் தன் மழலை சிரிப்புடன் பார்க்கிறாள் ஸ்ருதி.

Friday, March 18, 2011

இலையுதிர்கால நிழல்

Illaiudhir Kaala Nizhal- A shade in winter from Arun Gopalan on Vimeo.


வயதானவர்களுக்கு தேவையான அன்பை அழகாக விளக்குகிறது

காதலில் சொதப்புவது எப்படி - குறும்படம்

KADHALIL SODHAPUVADU YEPPADI from Abinandhan Ramanujam on Vimeo.

காமடியான கதை

மிட்டாய் வீடு - குறும்படம்

MITTAI VEEDU from Abinandhan Ramanujam on Vimeo.

அழகான அனுபவம்

எல்லோரும் சொல்லும் பாட்டு

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷமே அன்பெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே
எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து

நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மை என்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்
இரயில் சிநேகமாய், புயல் அடித்த மேகமாய்
கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லை என்றால் கண்ணகி எது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே
எது கூடுமோ, எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

படம் : மறுபடியும்
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
பாடல் : வாலி
குறிப்பு :
என்ன அருமையான வரிகள் :

நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மை என்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்

தபால்காரன் - குறும்படம்

அருமையான காட்சிகள், அருமையான கதை

Sunday, March 13, 2011

முதிர்கன்னி

வறுமையினாலும் ,
வரதட்சணை கொடுமையினாலும் ,
தோற்ற பொலிவுகளாலும்,
மலராத மண வாழ்க்கையால் ,
அரும்பிடும் குழந்தைதான் முதிர்கன்னியோ ?

Friday, March 11, 2011

வாழ்க்கை அழகானது





அழகான,அன்பான குடும்பம்,
தாயின் அரவணைப்பு,
தந்தையின் கவனிப்பு,
உடன்பிறந்தவர்களின் பாசங்கள்,
உறவுகளின் நேசங்கள்,
மழலையின் சிரிப்பு,
மழைச்சாரலின் சுகம்,
துன்பத்தில் தூக்கிவிடும் கைகள்,
நண்பனின் அறிவுரைகள்,
சில்லென்ற காற்று,
மெய்மறக்கும் புத்தகங்கள்,
தொலைந்துபோன முகங்கள்,
கண்ணாடியின் பிம்பங்கள்,
இறைவனின் கருணை,
காலையின் பொலிவுகள்,
இரவின் நிசப்தம்,
நிலவின் குளுமை,
தென்றலின் குளுமை,
பனியின் சாரல்,
காலைச்சூரியனின் கதிர்கள்,
வானவில்லின் நிறங்கள்,
ஏழையின் சிரிப்புகள்,
உழைப்பின் வியர்வைகள்,
காதலின் வலிகள்,
பசிக்கும் வயிறுகள்,
சோறூட்டிய கைகள்,
அறிவூட்டிய உள்ளங்கள்,
கரைசேர்த்த ஓடங்கள்,
தனிமையின் இனிமை,
முதுமையின் எளிமை,
தோல்வியின் வடுக்கள்,
கோபத்தின் வெளிப்பாடுகள்,
அலுவலக நண்பர்கள் ,
கல்லூரி நினைவுகள் ,
கோடையின் கானல்நீர்,
பறவைகளின் சங்கீதங்கள்,
பயணங்களின் நினைவுகள்,
பசிநேர உணவுகள்,
கோவில் பிரசாதங்கள்,
அலைகடலின் ஓசைகள்,
ஆழ்கடலின் அமைதி,
குழந்தைபருவ விளையாட்டுகள் ,
வாலிப குறும்புகள் ,
தாய்மைப்பேரின் சந்தோசங்கள் ,
பௌர்ணமி நிலவின் குளுமை,
மூன்றாம்பிறையின் அழகு,
இப்படி இன்னும்பல நம் வாழ்க்கையில்,
வாழ்க்கை அழகானது!வாழ்க்கை வாழ்வதற்கே!

Wednesday, March 9, 2011

கண்ணீர்


என்  சுக  துக்கங்களை   
எனக்கு  காட்சிப்படுத்தும்  காலக்கண்ணாடி  நீ !

துன்பம்  எனும்   மேகங்கள்  சென்று 
இதயம்  எனும்  வானத்தில்  இடி  போல தாக்குவதால் தான்  நீ
கண்ணீர்  எனும் மழையை  பொழிகிறாயோ ?
எனக்கு தெரியவில்லை,   புரியவுமில்லை 
ஆம்   புரிந்திருந்தால்  நான்  ஞானி ஆகி இருப்பேன்

Monday, March 7, 2011

பெண்

கருவில் தோன்றிய பரப்பிரம்மம் 
ஏழு தினங்களில் ஆண் ,பெண் என 
திரிந்து குழந்தையாக பிறக்கிறது 
பிறந்த பெண் குழந்தையானது 
பல பொறுப்புகளை ஏற்று 
மனுவின் உச்சமாக மாறுகிறது 
தாய் எனும் தெய்வம் இல்லையேல் 
மனிதன் மண்ணில் இல்லை
சகோதரி எனும் பந்தம் இல்லையேல்
பாசங்களும் நேசங்களும் கிடைப்பதில்லை 
மனைவி எனும் சொந்தம் இல்லையேல் 
மனிதன் மனிதனாக இருப்பதில்லை 
காதலி எனும் நேசம் இல்லையேல் 
மனிதன் இதயத்துடன் இருப்பதில்லை 
பெண் குழந்தை எனும் தென்றல் இல்லையேல்
மனிதன் வாழ்க்கை சோலையாக இருப்பதில்லை 

இப்படி எத்தனை எத்தனை பரிமாணங்கள் 
அதில்தான் எத்தனை தியாகங்கள் 
பெண்ணே நீ மட்டும் இல்லையேல் 
இவ்வுலகம் இன்று இடுகாடாக இருக்கும்
உன்னைப்போல பாசம் கொண்டவர்கள் யார் ?
உன்னைப்போல ஆளுமை கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல கருணை கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல இரக்கம் கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல பொறுமை கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல அறிவு கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல சகிப்புத்தன்மை கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல அமைதி கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல தியாகம் கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல பிறந்த வீட்டிலிருந்து
புகுந்த வீட்டிற்கு வனவாசம் சென்றவர்கள் யார்?
உன்னைப்போல சுமப்பவர்கள் யார்?

இன்று எத்தனையோ துறைகளில் ஆண்களுக்கு
நிகராய் வளர்ந்து விட்டாய் பெண்ணே !
ஆனாலும் என் கண்களுக்கு நீ
கருவினை சுமக்கும்போது மனிதர்களை 
சுமந்து நிற்கும் பூமித்தாய் போல உயர்ந்து நிற்கிறாய்!

Friday, March 4, 2011

அம்மா


இந்த புனிதம் இல்லையேல் நாம் இங்கில்லை
நாம் பிறக்கும் முன்னே இவளை
கொடுமைசெய்து கஷ்டபடுத்தி பிறக்கிறோம் !


நாம் அழும்போது நமக்காக அழும் இதயம் அவள்
இதயமில்லா பிள்ளைக்கும் அவள் இதயம் துடிக்கும்!


எனக்காக அழுபவள் அவள் என்னை சுமப்பவள் அவள்
ஊரே என்னை தூற்றினாலும் என்னை போற்றுபவள் அவள்
பல் முலையா வயதில் என் உணவை அறிந்து கொடுத்தவள்
நடை பழகா காலத்தில் என் கை பிடித்து நடை பழக்கியவள்


கால்வயிறு  கஞ்சி மட்டுமே இருப்பினும் தான் உண்ணா
விரதம் இருந்து என் பசி ஆற்றுவாள்- ஏனெனில்
அவள் சொல்வாள் நான் விரதம் இருந்து பெற்றவன் நீ என்று !


இப்படி எத்தனை விரதங்கள், எத்தனை சுமைகள்
எத்தனை வேதனைகள் தங்கினாய் எனக்காக
எனக்கு சோறூட்டிய,தாலாட்டிய கைகள்
எனக்காக தூக்கம் தொலைத்த கண்கள்


நீ படிக்காவிட்டாலும் எனை படிக்க வைக்க
நீ பட்ட வேதனைகள் ,சோதனைகள் நான் அறிவேன்
என் படிப்பிற்காக உன் மாங்கல்யத்தை அடமானம் வைத்தாய்
கவலைபடாதே உன் தியாகத்திற்காக
என் வாழ்க்கையையும் தியாகம் செய்வேன்!

Friday, February 25, 2011

வாழ்க்கை

வாழ்க்கை எனும் படகினிலே
மனிதன் பயணிக்கிறான் 
துன்பம் எனும் கடலலைகள் 
வந்துவந்து மோதுமம்மா 
கலங்காதே நீ திகையாதே 
தோல்விகளை கண்டு துவளாதே 

தன்னம்பிக்கை எனும் துடுப்பை போட்டு
வெற்றி எனும் கரையை எட்டு
சோம்பல்களை நீயும் விட்டுவிட்டு
சுறுசுறுப்பு எனும் படியை எட்டு

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?



வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...



இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...



எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...



படம் :பாலும்  பழமும் 
கவிஞர் :கண்ணதாசன் 
பாடியவர் :T .M . சௌந்தர்ராஜன் 
இசை :.M.S.விஸ்வநாதன் 



கருத்து :

இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலும் அர்த்தங்கள் நிறைந்திருக்கும்.

வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்

இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா?

மனுஷன் என்னமா எழுதியிருக்கார் .



Tuesday, January 25, 2011

காவலன் விமர்சனம்




ரொம்ப நாளைக்கு பிறகு விஜய் மீண்டும் காதல் கதையில் நடித்துள்ளார் .பஞ்ச  வசனங்கள் இல்லாத ,பில்டப் இல்லாத விஜயை இந்த படத்துல பார்க்கலாம் .
கதை என்னவோ சாதாரணமான காதல் கதை தான் என்றாலும் டைரக்டர் சித்திக் தனது திரைக்கதையால் வித்தியாசமாக எடுத்து இருக்கிறார் .

யாரோ ஒரு பெண் குரல் டைரியில் இருக்கும் எழுத்துக்களை வாசிப்பது போல படம் ஆரம்பமாகிறது .அப்படியே படம் பிளாஷ்பாக்க்ள நடக்குற மாதிரி சொல்லபடுகிறது .அதுல
செம்மநூர் பெரிய மனிதரான ராஜ்கிரண் ஒரு ஊருக்கு தன் நம்பிக்கைதுரோகியை கொலை செய்துவிட்டு திரும்பும்போது வழியில் ஒரு தாய்(நடிகை யமுனா ) பிரசவ வலியால் துடிப்பதை பார்த்து லிப்ட் கொடுத்து காபற்றுகிறார்கள் .பிறகு அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறக்கிறது ,தன்னைப்போல் அடிதடியில் இல்லாமல் அமைதியாக இருக்குமாறு வாழ்த்தி அதற்கு பூமிநாதன்னு பேர் வைக்கிறாரு அந்த பெண் ராஜ்கிரனை தன் அண்ணன் போல கருதி அவரை பற்றி எடுத்து சொல்லி தன் குழந்தையை வளர்க்கிறார் .ஆனால் அந்த சிறுவன் துடுக்குத்தனமாக ஆக்ரோசமாக  வளருகிறான் ,இப்படி போகும் கதையில் அந்த பையன் வளர்ந்து பெரியவனா ஆகிறான் அதான் விஜய் .
அவனுடைய  சண்டைகள் அதிகமாக,  அவனை திருத்துவதற்கு விஜயின் தாய் ,தந்தை மற்றும் மாமா அனைவரும் சேர்ந்து முத்துராமலிங்கம் ஐயா (ராஜ்கிரண் ) உயிர்க்கு ஆபத்து என்று சொல்லி நாடகம் ஆடுவதை உண்மை என நம்பி விஜய் அவருக்கு பாடிகார்டாக போகிறார் .
ஆனால் ராஜ்கிரண் விஜயை பாடிகார்டாக சேர்க்கவில்லை ,பிறகு விஜயின் அப்பா எழுதிய கடிதத்தை கண்ட பிறகு பாடிகார்டாக சேர்த்து கொள்கிறார் ஆனால் அவருக்கு அல்ல , அவரின் மகள் மீரா (அசின் ) மற்றும் அவர் தோழி மித்ராவுக்கு பாடிகார்டாக அவரும் கல்லூரியில் சேர்ந்து செல்கிறார் .அங்கே கல்லூரியில் விஜய் மிகவும் கண்டிப்புடன் இருப்பதால் அசின் சுதந்திரமாக இருக்கமுடியவில்லை .எனவே விஜயை தன் வழிக்கு மாற்ற அவர் நண்பர்களிடம் ஐடியா கேட்கிறார் ,விஜயை யாராவது ஒரு பெண் காதலிக்குமாறு ஒரு நண்பன் ஐடியா சொல்கிறான் .ஒரு சந்தர்பத்தில் விஜயிடம் இருந்து தப்பிக்க அசினே காதலியாக விஜய்க்கு பிரைவேட் நம்பரிலிருந்து பேசுகிறார் .

முதலில் நேசிக்காத விஜய் போகப்போக அந்த போன் காதலியை காதலிக்க  தொடங்குகிறார் விளையாட்டாக அசின் தொடங்கினாலும் விஜயின் குணங்கள் மற்றும் காதலை கண்டு உண்மையாகவே விஜயை காதலிக்க தொடங்குகிறார் .ஒரு கட்டத்தில் விஜயும் போன் காதலியான அசினும் ஊரை விட்டு ஓட முடிவு செய்து கிளம்பும் போது ,ராஜ்கிரணுக்கு விஜயும் அசினும் ஊரை விட்டு ஓடுவதாக தகவல் வரவே அவர் தன் ஆட்களை அனுப்பி விஜயை கொள்ள சொல்கிறார் , சண்டைகளுக்கு பிறகு ராஜ்கிரண் விஜயை கொள்ளும் நேரத்தில் அசின், விஜய் காதலிப்பது வேறு ஒரு பெண், அந்த பெண் அவருக்காக ரயில்நிலையத்தில் காத்திருக்கிறார் என்று சொல்கிறார் ,இதை  நம்பும் ராஜ்கிரண் விஜயை அனுப்புகிறார் ,அசின் சொல்லியது உண்மையா என்று அறிய விஜயை பின்தொடர்ந்து செல்ல ஒரு ஆளை அனுப்புகிறார் ,ரயில் நிலையத்தில் அந்த பெண் இல்லை என்றால் விஜயை கொன்றுவிடு என்கிறார்
அந்த பெண் ரயில் நிலையத்தில் இருந்தாளா ?விஜய் என்ன ஆனார் ?அசின் என்ன ஆனார் ? டைரியை படித்தது யார் ? என்பதை திருப்பங்களுடன் சொல்லும் படம் தான் காவலன் .
இது மிகச்சிறந்த படம்னு சொல்லமுடியாது ஆனால் குடும்பத்துடன் பார்த்து மகிழும்   காமடியான காதல் படம் .

பஞ்ச் டயலாக் ,பில்டுப்னு ரூட் மாறி போய்ட்டு இருந்த விஜைய்க்கு தொடர்ச்சியான தோல்விகள் கற்று கொடுத்திருக்கும் பாடம் நன்றாக தெரிகிறது .ஒரு அமைதியான விஜயை சமீபத்தில் வந்த எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது .அதுவும் கொஞ்சம் வெயிட் போட்டு மீசை அழகா வச்சி பார்க்க நல்லா இருக்கார் .விஜய்கிட்ட நடிப்பு திறமைகள் இருப்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார் .அதுவும் பார்க்குல காதலிகிட்ட பேசற மாதிரி பேசுறன்னு அசின் கிட்ட பேசற இடம் ,பேசிட்டு போகும்போது பதட்டத்துல  இடறி விழுகிற இடம் ,எனக்கும் சேர்த்து வேண்டிக்கங்கனு சொல்லற இடம் ,முற்பகுதியில வடிவேலோட காமெடி பண்ணும் இடம்னு நெறைய ஸ்கோர்  பண்ணியிருக்கார் .விஜய் இது போல மாறுபட்ட கதைகளில் தான் உங்களை  எதிர்பார்கிறோம் .அதுவும் இந்த படத்துல விஜய் முகத்துல நெறைய எக்ஸ்ப்ரஷன் கண்பிச்சிருக்கார் .
அசினுக்கும் நடிக்க நல்ல வாய்ப்பு .பிற்பகுதியில் நடிப்பில் நிறைய ஸ்கோர்  பண்ணியிருக்கார் .அதுவும் பார்க்ல விஜய் பேசிட்டு போனபிறகு தன் தோளை முத்தம் செய்து அழும் இடம் நல்ல நடிப்பு .கொஞ்சம் முதுமை அசின் முகத்துல தெரியுது மத்தபடி ஓகே .
அசின் தோழியா வரும் மித்ரா கதையின் திருப்பத்திற்கு பயன்படுகிறார் .வடிவேலுவின் நகைச்சுவை படத்தோட சேர்ந்து வந்து சிரிக்க வைக்கிறது .
பிற்பகுதியில் பின்னணி இசையில் வித்யாசாகர் கலக்கி இருக்கார் ."யாரது யாரது " அருமையான மெலோடி பாடல் ,பட்டாம்பூச்சி மற்றும் சட சட சாங் குட்
சித்திக் நன்றாக டைரக்ட் பண்ணி இருக்கார் ,சில இடங்களில் லாஜிக் இல்லாமல் இருந்தாலும் நகைச்சுவையால் அந்த குறையை போக்கிவிடுகிறார் குடும்பத்தோட பார்க்க நல்ல படத்தை கொடுத்ததற்காக அவருக்கு ஒரு சபாஷ் .
மொத்தத்தில் காவலன் குடும்பத்துடன் பார்க்ககூடிய அருமையான பாடம்.