Pages

Friday, February 25, 2011

வாழ்க்கை

வாழ்க்கை எனும் படகினிலே
மனிதன் பயணிக்கிறான் 
துன்பம் எனும் கடலலைகள் 
வந்துவந்து மோதுமம்மா 
கலங்காதே நீ திகையாதே 
தோல்விகளை கண்டு துவளாதே 

தன்னம்பிக்கை எனும் துடுப்பை போட்டு
வெற்றி எனும் கரையை எட்டு
சோம்பல்களை நீயும் விட்டுவிட்டு
சுறுசுறுப்பு எனும் படியை எட்டு

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?



வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...



இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...



எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...



படம் :பாலும்  பழமும் 
கவிஞர் :கண்ணதாசன் 
பாடியவர் :T .M . சௌந்தர்ராஜன் 
இசை :.M.S.விஸ்வநாதன் 



கருத்து :

இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலும் அர்த்தங்கள் நிறைந்திருக்கும்.

வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்

இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா?

மனுஷன் என்னமா எழுதியிருக்கார் .