கோடைக்காலம் வந்து விட்டது எங்கெங்கும் ஒரே வெயில் ,வெப்பம் தாங்க முடியதாளவிற்கு வாட்டி வதைக்கிறது.நம் அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் (சும்மா ஒரு பந்தாவுக்கு ),சில சமுக அமைப்புகளும் தண்ணீர் பந்தல் போட தயாராகிவருகின்றன. நாமும் இந்த வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க முயன்ற அளவு தண்ணீர்,குளிர்பானம் ,பழச்சாறுகள்,இளநீர் ,தர்பூசணி,வெள்ளரி,பனங்காய் ,கூழ் போன்று பல வகைகளில் நம் தாகத்தினை போக்கிகொள்கிறோம். ஆனால் நம்மிலேயே பலர் இந்த வெயிலில் வேலை செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர் ,அவர்களுக்கு தேவையான குடிநீரை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்,அதற்காக உங்களால் முடிந்தால் உங்கள் இருப்பிடத்தில் ஒரு தண்ணீர் பந்தல் அமைக்கலாம்.இது சாத்தியமே.
ஆனால் நாம் மனிதர்கள் எப்படியாவது இந்த வெயிலை பொருட்படுத்திக் கொள்வோம் .எல்லா காகங்களும் புத்திசாலிகள் அல்ல,எல்லா காகங்களுக்கும் கற்கள் கிடைப்பதில்லை ,கற்கள் கிடைத்தாலும் குடிநீர் உள்ள பானை கிடைப்பதில்லை.ஆம் நான் சொல்லவருவது இதுதான் நம்மை விட கவனிப்பாரற்று இந்த புவியில் நிறைய உயிரினங்கள் உள்ளன.பறைவைகள் ,வீடு பிராணிகள் ,செல்ல பிராணிகள் ,மற்றும் பல உயிரினங்கள் ,காட்டு விலங்குகள் (நம்மால் அதன் அருகே செல்ல முடியாது அது வேறு விஷயம் ) இப்படி எத்தனையோ உயிரினங்கள் .அவைகளும் இந்த கோடைகாலத்தில் வாடிவிடும் என்பதில் ஐய்யமில்லை.
இந்த வாரம் புதிய தலைமுறை வார இதழில் வந்த ஒரு கட்டுரையில் பறைவைகளுக்கு தண்ணீர் வைப்போம் என்று எழுதி இருந்தார்கள் .ஆம் நம்மால் முடிந்த அளவிற்கு நம் வீட்டின் மேற்கூரையிலோ அல்லது தகுந்த இடத்தினிலோ ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் வைத்து விட்டால் ,அது எதாவது ஒரு உயிரினத்திற்கு உதவிகரமாக இருக்கும் .இதற்கு நாம் ஒன்றும் கஷ்டப்பட்டு செய்யபோவதில்லை ,நம் ஒய்வு நேரத்தில் செய்தாலே போதும்.இந்த அவசர உலகத்தில் நாம் சிரிப்பதையும் ,மற்றவர்களிடம் மனம் விட்டு பேசுவதையும் மறந்த பொம்மைகளாகி விட்டோம். குறைந்தது இப்படி ஒரு சிறிய உதவியாவது செய்ய நாம் முயலுவோமே .
0 comments:
Post a Comment