பாரதகதையினிலே தோன்றிய அரவானை
திருமணம் செய்வதற்காக திருமால் எடுத்த
மோகினி அவதாரமே உன் பிறப்பிடமோ ?
திருமால் தெய்வம் என்பதால் அவனை வணங்குகின்றனர்
நீயோ மானிடப்பிறவி என்பதால்தான் வெறுக்கின்றனரோ ?
பாவம் அவர்களுக்கு தெரியாது நீ தான் உயர்ந்தவள் என்று ,
திருநங்கையான நீதான் தெய்வத்திருமகள் என்று!
மனிதர்களை நேசிக்காத இந்த மானிடப்பதர்கள்
உன்னை எட்டிற்கும், பத்திற்கும் இடைப்பட்ட
எண்ணை கொண்டு அழைக்கின்றனர் - ஆனால்
அவர்களுக்கே தெரியாது அது கிண்டல் அல்ல உண்மை என்று
ஆம் நீதான் அஷ்ட லட்சுமிகளோடு சேர்த்து
வணங்கக்கூடிய ஒன்பதாவது லட்சுமி ஆவாய்!
உன் தோற்றத்தினை பார்த்து ஏளனம் செய்கின்றனர்
இதில் ஆண்கள் மட்டுமல்ல பல பெண்களும் உன்னை வெறுக்கின்றனர்
உன்னிலும் பலர் தன் திறமையினை அறியாமல்
பாலியியல் மற்றும் பிச்சை எடுத்து தங்கள் பெயரினை கெடுத்துக்கொள்கின்றனர்!
நான் உணர்கிறேன் இதற்கு சமூகமும் ஒரு காரணம் என்று,
ஏய் சமுகமே ஊனமுற்றவர்களை ஏற்றுக்கொள்கிறாய்
ஏன் இந்த திருநங்கைகளை ஏற்க தயங்குகிறாய்!
தயக்கமே வேண்டாம் அவள் வேறுயாருமல்ல நம்முடம்
நம்மைபோலவே இவ்வுலகினை நேசிக்க பிறந்த தெய்வத்திருமகள் !
0 comments:
Post a Comment