போன வரம் நீயா நானாவில் ஒரு அருமையான விவாதம் (நான் முழுசா பாக்கல,அது வேற விஷயம் ) நாம் விரும்பும் உணவு வகைகள் பற்றி பேசிகொண்டிருந்தார்கள்.அதுல கோபிநாத் ஒரு கேள்வி கேட்டார் உங்களுக்கு பிடித்த உணவு என்ன என்று ,நெறைய பதில் வந்தது .நெறைய பேர் மீன் குழம்பு பிடிக்கும்னு சொன்னங்க அதுவும் இரவுல மீன் கொழம்ப வைத்து அதை காலையில பழைய சாதத்திற்கு சேர்த்து சாப்டா அந்த ருசியே தனி அப்படின்னு நெறைய பேர் சொன்னங்க.
ச்சே என்ன அருமையான ரசனை நம்ம ஆளுங்களுக்கு.ஆம் நம்ம ஊர்ல நெறைய மக்கள் அதை விரும்புவாங்க.எனக்குத்தான் சின்ன வயசிலிருந்து மீன் என்றாலே ஆகாது அதனால நான் அந்த "நேத்து வச்ச மீன்குழம்பு " அருமைய நான் அறியவில்லை.நமக்கு கத்திரிக்கா இல்ல வெண்டக்க இல்லனா சுண்டக்கா காரக்குழம்ப காலையில பழுதுக்கு சேர்த்து சாப்டா எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடலாம்.அதன் ருசியே தனி எந்த சரவணபவனிலும் கிடைக்காது .
அப்புறம் எனக்கு பிடிச்சத சொல்றேன்-- > நான் எட்டாவது படிக்கறவரை என் பாட்டி(அப்பாவோட அம்மா-நான் எட்டாவது படிக்கும் போது இறந்துட்டாங்க) தயிர் சாதம் பிசைந்து நல்லா கொழகொழன்னு தருவாங்க அதை சாப்பிடவே செம சூப்பரா இருக்கும் அதேபோல கீரைய கடைந்த கல்செட்டியிலேயே கொஞ்சம் சாதம் போட்டு நல்லா கலரி உருண்டை உருண்டைய பிடிச்சி எங்க எல்லாருக்கும் கொடுப்பாங்க ,ச்சே அந்த அருமையான தருணங்கள் மறக்கமுடியாதவை ,அந்த சுவையும் மறக்கமுடியாது.
நான் பத்தாவது படிக்கறவரை எங்க வீட்ல ஹோட்டல் வியாபாரம்தான் அதனால அண்ணன் அப்போஎல்லாம் நல்லா சாப்ட்டு கன்னமெல்லாம் வீங்கி கொழு கொழுன்னு இருந்தேன்.இப்போ நம்ம தனுஷ் போல ஆகிட்டேன்(விடுங்க பாஸ் வாழ்கையில இதெல்லாம் சகஜம்),அப்போ எங்க அப்பா அம்மா செய்ற சாம்பார் சூப்பரா இருக்கும் .இங்க சென்னைல இட்லிக்கு என்ன சாம்பார் செய்றாங்க நாங்க அப்போ எப்படி செய்வோம் தெரியுமா ?நீங்க வேனும்ன ட்ரை பண்ணிபாருங்க.
ஒண்ணுமில்ல தேவைக்கேற்ப காரட் ,கத்திரிக்காய் ,சௌசௌ ,முள்ளங்கி இதஎல்லத்தையும் துவரம் பருப்பு போட்டு(எண்ணெய்,தக்காளி ,வெங்காயம் ,உப்பு ,மிளகாய்த்தூள் எல்லாம் சேர்த்து )கொதிக்க வைத்தபின் அதை நன்றாக வடிகட்டி அதாவது காய்கறி மற்றும் பருப்பினை மட்டும் தனியாகவும் அண்ட் தண்ணீரை தனியாகவும் பிரித்தபின் ,காய்கறி மற்றும் பருப்பினை நன்றாக அரைத்து(கல்சட்டி அல்லது கிரைண்டர் மூலமாக ) பின் அதை அந்த பிரித்த தண்ணீரில் கலந்து மீண்டும் கொதிக்கவைத்து தாளித்து இறக்கினால் சாம்பார் ரெடி.அந்த சாம்பாருக்கும் இட்லிக்கும் என்ன ஒரு டேஸ்ட் தெரியுமா சும்மா இட்லி போய்ட்டே இருக்கும் .இப்பவும் எங்க வீட்ல இந்த சாம்பார் தான் முதன்மை.
அப்புறம் பூரி கிழங்கு ,வடைகறி ,எங்க கடையில செய்ற மெதுவடை ,மசால் வடை ,மிக்சர்,வெங்காய பக்கோடா,வெஜிடபுள் போண்டா ,இப்படி நெறைய பிடிக்கும்.எங்க ஹோட்டெல நாங்க மார்கழி மாதத்துல காலையில மட்டும் டீ கடை வைப்போம் .அப்போ அந்த மார்கழி குளிருல எங்க அப்பா நல்லா பால கயவச்சிட்டு இருப்பாரு நான் ஒரு விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து போனவுடன் அந்த கொதித்த பாலோடு சேர்ந்த பாலின் மீது படர்ந்த ஏடினை தனியே எடுத்து அதில் சர்க்கரைய போட்டு கொடுப்பாங்க சும்மா சூப்பரா இருக்கும் அது.
போதும் போதும் இப்படியே உன் சாப்பாட்டு புராணத்த சொல்லாதேனு நீங்க அழுவறது எனக்கு புரியுது கவலையே வேண்டாம் இன்னும் சில மட்டும் .
நம்ம ரசம் சாதத்திற்கு சும்மா வறக்குற கருவாடுனு சொல்லுவாங்க(பெருசா இருக்கும்பா) அதை வறுத்து ரசம் சாதம் சாப்டா ஹ்ம்ம் ஹ்ம்ம் எவ்ளோ வேணும்னாலும் சாப்டலாம் என்ன அதை வறுத்தால் உங்க தெரு முனைவரை வாசம் வீசும்.அதேபோல ரசத்திற்கு வறுகடலை துவையல் சூப்பரா இருக்கும்.அப்புறம் நம்ம கேழ்வரகு கூழ் செய்து அதை கரைத்து அதுல கொஞ்சம் வேர்கடலை போட்டு அது இல்லனா கொஞ்சம் மாங்காயோ இல்ல வெல்லமோ கடித்து சாப்டா நல்லா இருக்கும்.அதுவும் இந்த கோடையில இதுதான் சிறந்தது .
சரிசரி நாக்குல ஜொள்ளு வழியுது பாருங்க தொடைசிட்டு போய் வேலைய பாருங்க.
2 comments:
உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்...
நேரம் இருந்தால் பார்க்கவும் ...
http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_10.html
மிக்க நன்றி karun .v
Post a Comment