Pages

Monday, March 7, 2011

பெண்

கருவில் தோன்றிய பரப்பிரம்மம் 
ஏழு தினங்களில் ஆண் ,பெண் என 
திரிந்து குழந்தையாக பிறக்கிறது 
பிறந்த பெண் குழந்தையானது 
பல பொறுப்புகளை ஏற்று 
மனுவின் உச்சமாக மாறுகிறது 
தாய் எனும் தெய்வம் இல்லையேல் 
மனிதன் மண்ணில் இல்லை
சகோதரி எனும் பந்தம் இல்லையேல்
பாசங்களும் நேசங்களும் கிடைப்பதில்லை 
மனைவி எனும் சொந்தம் இல்லையேல் 
மனிதன் மனிதனாக இருப்பதில்லை 
காதலி எனும் நேசம் இல்லையேல் 
மனிதன் இதயத்துடன் இருப்பதில்லை 
பெண் குழந்தை எனும் தென்றல் இல்லையேல்
மனிதன் வாழ்க்கை சோலையாக இருப்பதில்லை 

இப்படி எத்தனை எத்தனை பரிமாணங்கள் 
அதில்தான் எத்தனை தியாகங்கள் 
பெண்ணே நீ மட்டும் இல்லையேல் 
இவ்வுலகம் இன்று இடுகாடாக இருக்கும்
உன்னைப்போல பாசம் கொண்டவர்கள் யார் ?
உன்னைப்போல ஆளுமை கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல கருணை கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல இரக்கம் கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல பொறுமை கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல அறிவு கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல சகிப்புத்தன்மை கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல அமைதி கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல தியாகம் கொண்டவர்கள் யார்?
உன்னைப்போல பிறந்த வீட்டிலிருந்து
புகுந்த வீட்டிற்கு வனவாசம் சென்றவர்கள் யார்?
உன்னைப்போல சுமப்பவர்கள் யார்?

இன்று எத்தனையோ துறைகளில் ஆண்களுக்கு
நிகராய் வளர்ந்து விட்டாய் பெண்ணே !
ஆனாலும் என் கண்களுக்கு நீ
கருவினை சுமக்கும்போது மனிதர்களை 
சுமந்து நிற்கும் பூமித்தாய் போல உயர்ந்து நிற்கிறாய்!

0 comments:

Post a Comment