Pages

Friday, March 4, 2011

அம்மா


இந்த புனிதம் இல்லையேல் நாம் இங்கில்லை
நாம் பிறக்கும் முன்னே இவளை
கொடுமைசெய்து கஷ்டபடுத்தி பிறக்கிறோம் !


நாம் அழும்போது நமக்காக அழும் இதயம் அவள்
இதயமில்லா பிள்ளைக்கும் அவள் இதயம் துடிக்கும்!


எனக்காக அழுபவள் அவள் என்னை சுமப்பவள் அவள்
ஊரே என்னை தூற்றினாலும் என்னை போற்றுபவள் அவள்
பல் முலையா வயதில் என் உணவை அறிந்து கொடுத்தவள்
நடை பழகா காலத்தில் என் கை பிடித்து நடை பழக்கியவள்


கால்வயிறு  கஞ்சி மட்டுமே இருப்பினும் தான் உண்ணா
விரதம் இருந்து என் பசி ஆற்றுவாள்- ஏனெனில்
அவள் சொல்வாள் நான் விரதம் இருந்து பெற்றவன் நீ என்று !


இப்படி எத்தனை விரதங்கள், எத்தனை சுமைகள்
எத்தனை வேதனைகள் தங்கினாய் எனக்காக
எனக்கு சோறூட்டிய,தாலாட்டிய கைகள்
எனக்காக தூக்கம் தொலைத்த கண்கள்


நீ படிக்காவிட்டாலும் எனை படிக்க வைக்க
நீ பட்ட வேதனைகள் ,சோதனைகள் நான் அறிவேன்
என் படிப்பிற்காக உன் மாங்கல்யத்தை அடமானம் வைத்தாய்
கவலைபடாதே உன் தியாகத்திற்காக
என் வாழ்க்கையையும் தியாகம் செய்வேன்!

0 comments:

Post a Comment