நேற்று(27-03-2011) PVR cinemasla சிங்கம் புலி படத்திற்கு என் ரூம் நண்பர்களுடன் இரவு காட்சிக்கு சென்றிருந்தேன்.படம் ஒரு 10.15 PM மணிக்கு தொடங்கியது.நான் N வரிசையில் உள்ள 10 ம் எண் இருக்கையில் அமர்ந்தேன்.அது அந்த வரிசையில் முதல் இருக்கை ஆகும் ,என் இருக்கையின் இடதுபுறத்தில் உள்ள இருக்கைகளில் என் நண்பர்கள் உட்கார்ந்து கொண்டார்கள்.என் வலதுபுறம் நடப்பதற்காக நீண்ட இடைவெளி அதற்கு அடுத்து வரிசையாக இருக்கைகள்.
படம் அரம்பித்தவுடன் ஒரு கணவன் ,மனைவி,மற்றும் 3 வயதுடைய அவர்களின் குழந்தை என மூவரும் என் வலதுபுறத்தில் உள்ள இடைவெளிக்கு அடுத்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள்.வந்ததிலிருந்தே அந்த குழந்தை அடம் செய்து கொண்டே இருந்தது.பிறகு அதன் தாய் அதை கஷ்டபட்டு சமாதானம் செய்து சிறிது நேரம் நிம்மதியாக படம் பார்த்தனர்.
சிறிது நேரம் கழித்து அந்த குட்டி பாப்பா அவர்கள் மடியிலிருந்து கீழே இறங்கி விளையாட ஆரம்பித்தது.என்ன நினைத்ததோ தெரியவில்லை, என் இருக்கையின் அருகே வந்தது, நான் அதை பார்த்து ஒரு புன்னகை செய்து கை கொடுத்தேன்,அந்த பாப்பாவும் கை கொடுத்து விட்டு சென்றது.பிறகு அடிக்கடி வந்து என்னிடம் கை கொடுத்து விட்டு சென்றது.அந்த முழு வெளிச்சம் இல்லாத அந்த இருட்டில் சரியாக முகம் தெரியாத அந்த குழந்தை ஒவ்வொரு முறை வந்து கை கொடுத்து விட்டு சென்றது ஏதோ ஒருவித சந்தோஷத்தை தந்தது.எனக்கு படம் பார்ப்பதை விட அந்த குழந்தையின் செயல்களை வேடிக்கை பார்ப்பதையே செய்து கொண்டிருந்தேன்.இடைவேளைக்கு சிறிது நேரம் முன்னால் அந்த குழந்தையை அவங்க அம்மா தூக்கி மடியில் வைத்துக்கொண்டார்கள்.உடனே அந்த குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது ,அவர்கள் சமாதானம் படுத்தியும் அது அடங்கவில்லை.எனவே அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு அந்த அம்மா அப்பா இருவரும் சும்மா வெளியே சென்றார்கள் .எனவே என்னால் அந்த குழந்தையின் முகத்தினை இடைவேளையின் போதும் சரியாக பார்க்க முடியவில்லை .இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்த சில நிமிடங்கள் கழித்து அவர்கள் மீண்டும் வந்து அமர்ந்தார்கள் .இப்பொழுது சிறிது நேரம் அமைதியாக இருந்த அந்த வாண்டு ,பிறகு மீண்டும் கீழே இறங்கி நடக்க ஆரம்பித்து என்னிடம் வந்து மீண்டும் ஒரு புன்னகை ஒரு கை குலுக்கல் செய்து விட்டு சென்றது.
பிறகு அந்த சின்ன குழந்தை ஒவ்வொரு படிகளை ஏறி இறங்கியது,இதை பார்த்த அதன் அம்மா குழந்தை விழுந்து விடுமோ என்ற கவலையில் அதன் கையை பிடித்துக்கொண்டு அந்த நடக்க உள்ள இடைவெளியில் கடைசி வரிசை முதல் ,முதல் வரிசை வரை அழைத்து சென்றார்கள் ,இப்படியாக ஒரு ஐந்து முறை நடந்தபின்னும் அந்த குழந்தைக்கு எந்த களைப்பும் இல்லை ஆனால் அந்த அம்மா மற்ற பார்வையாளர்களை கருத்தில் கொண்டு குழந்தையை தூக்கிகொண்டு தன் இருக்கையில் அமர்ந்தார் .ஆனால் நம்ம குட்டி தேவதை சும்மா இருப்பங்களா மீண்டும் அடம் சரியென்று அவர்கள் குழந்தையை கீழே இறக்கி விட்டார்கள் .
நம்ம பாப்பா மீண்டும் என்னிடம் வந்து ஒரு புன்னகை செய்து கைகொடுத்து விட்டு சென்று மீண்டும் தன் நடைபயணத்தை தொடர்ந்தாங்க.அப்போ அவங்க பின்னாடி இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவனிடம் ஒரு சின்ன விளையாட்டு அப்புறம் லேசா கத்த ஆரம்பிச்சாங்க ,உடனே அவங்க அம்மா மீண்டும் நம் தேவதையுடன் நடந்துகொண்டே படம் பார்த்தாங்க .ஒருமுறை நடந்துகொண்டே என் இருக்கையின் அருகே வரும்போது ,நான் அந்த குழந்தையிடம் நடந்துகொண்டே இருக்கீங்களே உங்களுக்கு கால் வலிக்கலீயா போய் உட்காருங்க அப்படீன்னு சொன்னதும் ,ஹுஹூம் அப்படீன்னு இன்னும் என்னென்னவோ தன் மழலை மொழியில் பேசியபடியே தன் நடையை தொடர்ந்தாள் .கடைசியில் படம் முடிந்த பின் அந்த குழந்தைக்கு ஒரு ஹாய் மற்றும் bye சொல்லநினைதிருந்தேன்,ஆனால் படம் முடிந்தபோது அந்த குழந்தை அவளின் அம்மாவுடன் அந்த அரங்கத்தின் அடுத்த ஓரமாக நடந்து கொண்டிருந்தாங்க .என் நண்பர்கள் கிளம்ப நிர்பந்தித்ததால் வேறு வழியின்றி அந்த குட்டி தேவதையினை பார்த்துக்கொண்டே அரங்கத்தை விட்டு வெளியே வந்தேன்.
கடவுள் எவ்வளவு அற்புதமானவர் ,நம்ம வாழ்க்கையில் கஷ்டத்தையும் கொடுத்து அதுக்கான மருந்தையும் தருகிறார் ,நாம் தான் சரியான மருந்தை தேர்வு செய்வதில்லை .நெறையபேர் நினைச்சிருக்கலாம் படம் பார்க்க ஏன் குழந்தையை இரவு காட்சிக்கு கூப்பிட்டு வந்து நம்ம உயிரை வங்கராங்கனு,ஆனால் இன்று நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு மத்தியில் இந்த மாதிரியான சுகமான தடைகள் தடைகளே அல்ல .அந்த குழந்தையின் அம்மாவிற்கும் இது தோன்றியிருக்கலாம் ச்சே ஏன்தான் குழந்தையை கூப்பிட்டு வந்தோமோ என்று ,ஆனால் அந்த அம்மாவே நினைத்தாலும் இதுபோன்ற ஒரு நடைபயண அனுபவத்தினை எப்போதும் அனுபவிக்க முடியாது அந்த அறிய சந்தர்பத்தினை ஏற்படுத்திய அந்த சின்ன தேவதை , சக மனிதர்களை கண்டு பொறாமைபடும் இந்த உலகத்திலே அடே முட்டாள்களே மனிதர்களை நேசியுங்கள் என்று சொல்லும் ஒரே உள்ளம் இந்த கள்ளமற்ற குழந்தைகள் தான்.எனக்கு முன்பின் தெரியாத அந்த குட்டி தேவதை என்னிடம் வந்து தன் பிஞ்சு கரங்களை நீட்டி ஒரு மழலை சிரிப்பு சிரித்தபோது என் உள்ளத்தில் இருந்து எழுந்து என் உதட்டில் உதிர்ந்த அந்த புன்னகையில் என் மனம் இளகிப்போனதை அறிந்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன் .தெரியாது மீண்டும் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையுமா என்று ஆனால் என்றும் என் நினைவுகளில் நிழலாடும் ,மனிதர்களை நேசியுங்கள் ,குறைந்தது குழந்தைகளை நேசியுங்கள் ,வாழ்க்கையின் அர்த்தம் புலப்படும் .
2 comments:
lovely writing... keep going..
thanks
Post a Comment